For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

`மல்யுத்தத்தை விட்டு விலகுகிறேன்!' - கதறி அழுத சாக்‌ஷி மாலிக்

07:15 AM Dec 22, 2023 IST | Web Editor
 மல்யுத்தத்தை விட்டு விலகுகிறேன்     கதறி அழுத சாக்‌ஷி மாலிக்
Advertisement

மல்யுத்த போட்டியில் இருந்து விலகுவதாக இந்திய மல்யுத்த வீராங்கனை சாஷி மாலிக் அறிவித்துள்ளார்.

Advertisement

இதையடுத்து தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனையான சாக்‌ஷி மாலிக் கதறி அழுததுடன், மல்யுத்த விளையாட்டை விட்டே விலகுவதாக தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தல் முடிந்த பின்னர் மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: "40 நாள்கள் வரை நாங்கள் சாலையில் படுத்துக்கிடந்து போராட்டத்தில் ஈடுபட்டோம். பிரிஜ் பூஷணின் பிஸ்னஸ் பார்ட்னரும், அவருக்கு நெருக்கமானவருமான சஞ்சய் சிங் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், மல்யுத்தத்திலிருந்து விலகிவிடுவேன்.

ஒரு பெண் தலைவராக வரவேண்டும் என்றுதான் நாங்கள் கோரிக்கை வைத்தோம். பெண் தலைவராக இருந்தால் பாலியல் துன்புறுத்தல் வீராங்கனைகளுக்கு நடக்காது" என்றார்.

அப்போது சஞ்சய் சிங் வெற்றி பெற்றதாக முடிவு தெரியவந்தநிலையில், மல்யுத்த விளையாட்டில் இருந்து விலகுவதாக கூறி கதறி அழுதவாறே வெளியேறினார் சாக்‌ஷி மாலிக்.

தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பிரிஜ் பூஷன் சரண் சிங் கூறியதாவது: "மல்யுத்த வீரர்கள் அனைவரும் சமமாக நடத்தப்படுவர்கள். மல்யுத்த கூட்டமைப்பு அவர்களுக்கு ஆதரவாக நிற்கும். மல்யுத்த வீரர்களின் ஆட்டத்திறனை மட்டும் பார்ப்போம்" என்றார்.

முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சிங் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லியில் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியது.

Advertisement