For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

’காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்’ - இயக்குநர் விஜய்

05:35 PM Dec 26, 2023 IST | Web Editor
’காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்’   இயக்குநர் விஜய்
Advertisement

இயக்குநர் விஜய்யின் காரின் மீது இளைஞர் ஒருவர் மோதி,  விவாதத்தில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல் உதவி மேலாளரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இந்திய திரைப்படத் துறையில் பிரபல இயக்குநர்களுள் ஒருவர் ஏ.எல். விஜய்.  மதராசபட்டினம்,  தலைவா,  சைவம்,  தெய்வத்திருமகள் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இவர் தலைவா படத்தின் போது நடிகை அமலா பாலுடன் காதல் ஏற்பட்டு, 2014 ஆம் ஆண்டு அவரைத் திருமணம் செய்துகொண்டார். பின்னர் 2017 ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாட்டால் விவாரகரத்து செய்துகொண்டனர்.  இந்நிலையில்,  கடந்த 2019 ஆம் ஐஸ்வர்யா என்ற பொதுநல மருத்துவரை திருமணம் செய்துகொண்டார்

விஜய் இன்று காலை தனது மேலாளர் மணிவர்மா மற்றும் உதவி இயக்குநர்களுடன் சென்னை தியாகராய நகர் ஹபிபுல்லா சாலை வழியாக படப்பிடிப்பிற்காக காரில் சென்றுள்ளார்.  இந்நிலையில்,  இளைஞர் ஒருவர் விஜய்யின் காரில் இடித்துள்ளார்.  காரின் கண்ணாடியில் இடித்ததோடு மட்டுமில்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மேலாளர் மணிவர்மாவை ஹெல்மெட்டால் தாக்கியதாக கூறப்படுகிறது.  இந்த சம்பவத்தை உதவி இயக்குனநர்கள் தங்கள் மொபைலில் வீடியோ எடுத்துள்ளனர்.  பின்னர்,  வாக்குவாதம் முற்றிய நிலையில் விஜய் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனை இயக்குநர் விஜய்யுடன் இருந்த உதவி இயக்குநர்கள் அந்த நபர்
வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து உள்ளனர்.  பின்னர்
வாக்குவாதம் முற்றிய நிலையில் ஏ.எல் விஜய், உடனடியாக காவல் கட்டுப்பாட்டு
அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தேனாம்பேட்டை போலீசாரை பார்த்து இளைஞர் தப்பி ஓடியுள்ளார்.  இந்நிலையில் போலீசார் மேலாளர் மணிவர்மாவிடம் புகாரை பெற்றுக் கொண்டு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.  முதற்கட்ட விசாரணையில், அரும்பாக்கத்தை சேர்ந்த ஐசக் என்பதும் இவர் தனியார் பார் ஒன்றை வைத்து நடத்தி வருவதும் தெரியவந்துள்ளது. சம்பவத்தின் போது இவர் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் ஏ.எல் விஜய்,

"படப்பிடிப்பிற்காக இன்று காலை சென்ற போது இளைஞர் ஒருவர் தனது கார் கண்ணாடியை லேசாக இடித்துவிட்டு சென்றுள்ளார்.  கண்ணாடி மீது தெரியாமல் பட்டிருக்கும் என நினைத்துக் கொண்டு தானும் வாகனத்தை எடுத்து படப்பிடிப்பிற்காக சென்றோம்.  ஆனால் அந்த இளைஞர் தங்களுடைய காரை வழிமறித்து பிரச்னையில் ஈடுபட்டார்.  அப்போது அவர் மேல் தான் தவறு என சுட்டிக் காண்பிப்பதற்குள் அவர் நிலைத்தடுமாறி தவறான சொற்களை பயன்படுத்தினார்.

இளைஞர்கள் இதுபோன்று காலை நேரத்தில் மதுபோதையில் வருவது மிகவும் வருத்தம் அளிக்கிறது அது மட்டுமில்லாமல் மது அருந்தியிருந்தால் கால் டாக்ஸி அல்லது ஆட்டோவில் செல்லலாம். மாறாக மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குவது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்" என கூறியுள்ளார்.

Advertisement