“விலை மாது போல் உணர்ந்தேன்” - இந்தியாவில் நடக்குல் மிஸ் வேர்ல்ட் போட்டியின்போது ஏற்பட்ட கசப்பான அனுபவம் பகிர்ந்த இங்கிலாந்து அழகி மில்லா மேகி!
72வது உலக அழகி போட்டி தெலங்கானாவில் நடைபெற்று வருகிறது. மே 7ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டிகள் மே 31ஆம் தேதி வரை நடைபெறும். அரசு ஏற்பாடு செய்த இந்த போட்டி, பிரம்மாண்டமாக கடந்த மே 10ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள கச்சிபவுலி மைதானத்தில் அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியால் தொடங்கி வைக்கப்பட்டது.
உலக அழகி போட்டியில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளில் உள்ள அந்தந்த நாட்டின் அழகிகள் கலந்துகொண்டனர். அந்த வகையில் கடந்த 2024 ஆம் ஆண்டு மிஸ் இங்கிலாந்து பட்டம் பெற்ற மில்லா மேகியும் பங்கேற்றார். அதன் பின்னர் கடந்த மே 16 ஆம் தனிப்பட்ட காரணங்களுக்காக 72வது உலக அழகி போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
அப்போது அவர், ஒரு மாற்றத்தை ஏற்படுத்த நான் அங்கு சென்றேன் என்றும் ஆனால், குரங்குகளைப் போல் உட்கார வேண்டியிருந்ததாக தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு பதில் இங்கிலாந்தைச் சேர்ந்த மற்றொரு அழகி பங்கேற்றார்.
இந்த நிலையில் தெலங்கானாவில் நடந்த உலக அழகி போட்டியில் விலை மாதுபோல் உணரப்பட்டதாக இங்கிலாந்து அழகி மில்லா மேகி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “ஒரு விலை மாதுவைப் போல உணர்ந்தேன் போட்டியின்போது வெறும் பொழுதுபோக்கிற்காக அங்கு ஒதுக்கப்பட்டேன்” என்று கூறியுள்ளார்.