For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"வாழைப்பழம் இனி முன்னைப் போல் தித்திக்குமா என்று தெரியவில்லை!" - மாரி செல்வராஜை பாராட்டிய #DirectorShankar!

07:17 PM Aug 25, 2024 IST | Web Editor
 வாழைப்பழம் இனி முன்னைப் போல் தித்திக்குமா என்று தெரியவில்லை     மாரி செல்வராஜை பாராட்டிய  directorshankar
Advertisement

வாழைப்பழம் இனி முன்னைப் போல் தித்திக்குமா என்று தெரியவில்லை என இயக்குநர் ஷங்கர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Advertisement

பரியேறும் பெருமாள் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த அவர், அடுத்தடுத்து கர்ணன், மாமன்னன் என இரண்டு மாஸ் ஹிட் படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானதோடு, தமிழ் சினிமாவின் டாப் இயக்குனராகவும் உயர்ந்தார். அவர் இயக்கத்தில் நான்காவதாக வெளியாகி இருக்கும் திரைப்படம் வாழை. இப்படத்தை தன் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இயக்கி உள்ளார் மாரி.

வாழை திரைப்படத்தின் மூலம் மாரி செல்வராஜின் மனைவி திவ்யா தயாரிப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். இப்படத்தில் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, கலையரசன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்படம் கடந்த ஆகஸ்ட் 23-ந் தேதி சூரியின் கொட்டுக்காளி படத்துக்கு போட்டியாக ரிலீஸ் செய்தனர்.

வாழை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்திற்கு விமர்சன ரீதியாக வரவேற்பு கிடைத்துள்ளதோடு, வசூல் ரீதியாகவும் வாழை வேற லெவல் சாதனை படைத்து வருகிறது. இப்படத்தைப் பார்த்த இயக்குநர்கள் மற்றும் சினிமாத்துறையைச் சேர்ந்தவர்கள் பலரும் மாரி செல்வராஜை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், இயக்குநர் ஷங்கர் ‘வாழை’ திரைப்படத்தைப் பாராட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுயுள்ளார்.

அந்த வீடியோவில் இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளதாவது,

"வாழை திரைப்படத்தின் தாக்கம் பலமாக உள்ளது. இன்னும் என்னால் அதிலிருந்து வெளியே வரமுடியவில்லை. இனி எனக்கு வாழைப்பழங்களை பார்க்கும்போதெல்லாம் தலையில் வாழைத்தார்கள் சுமந்து செல்லும் இந்த கதையின் மாந்தர்கள்தான் நினைவுக்கு வருவார்கள். வாழைப்பழம் இனி முன்னைப் போல் தித்திக்குமா என்றும் தெரியவில்லை. ஒரு யதார்த்தமான சினிமாவில் அழகியல், உணர்வுகள் என எல்லாமே சிறப்பாக உள்ளது. வாழை திரைப்படம் இலக்கியத்தைப்போல உள்ளது. அனைவரும் தங்கள் பணிகளை சிறப்பாக செய்துள்ளனர். மாரி செல்வராஜுக்கும், படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்!" இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement