”பழங்குடியின மக்களை இழிவுபடுத்தும் நோக்கத்தில் பேசவில்லை” - விஜய் தேவரகொண்டா விளக்கம்!
சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் அண்மையில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரெட்ரோ படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் தேவரகொண்டா கலந்துகொண்டார்.
அப்போது அவர் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் நடந்த பயயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார். அத்துடன் பாகிஸ்தானை குறிப்பிட்டு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது அங்குள்ள மக்கள் எங்களுடையவர்கள் என்று பேசினார். மேலும் பாகிஸ்தானியர்கள் 500 ஆண்டு பழமையான பழங்குடியின மக்கள் போல் அறிவில்லாமல் இருக்கின்றனர் என கடுமையாக விமர்சனம் செய்தார். இதையடுத்து பழங்குடியின மக்களை இழிவாக பேசியதாக அவர் மீது எஸ்.ஆர். நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நடிகர் விஜய் தேவரண்டா தனது பேச்சிற்கு விளக்கம் கொடுத்து வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”ரெட்ரோ படக்குழுவின் போது தான் பேசிய ஒரு கருத்து மக்களிடையே பெரும் கவலையை தெரிவித்துள்ளது என்ற செய்து என் கவனத்திற்கு வந்துள்ளது. நான் சொன்ன இந்த கருத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் எந்த ஒரு சமூகத்தையும் துன்புறுத்தும் நோக்கத்தில் பேசவில்லை, அதுவும் நமது நாட்டின் பழங்குடியின மக்களை இழிவுபடுத்தும் நோக்கத்தில் பேசவில்லை, அவர்களை மிகவும் மதிக்கிறேன்.
To my dear brothers ❤️ pic.twitter.com/QBGQGOjJBL
— Vijay Deverakonda (@TheDeverakonda) May 3, 2025
நமது ஒற்றுமையை பற்றித்தான் பேசினேன். இந்தியா எப்படி ஒன்றாக இருக்கிறதோ நம் மக்கள் அப்படியே இருக்கிறோம். நாமும் ஒன்றாக முன்னேற வேண்டும் என்பதைத்தான் பேசினேன். நான் எப்படி இந்தியா மக்களை பாகுபாடு காண்பித்து இழிவுபடுத்தி பேசுவேன். அவர்களும் என் குடும்பம் போலத்தான்.
நான் பயன்படுத்திய பழங்குடி என்ற வார்த்தை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மனித சமூகத்தின் மோதலை குறிக்கிறது. ஆனால், அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. நான் சொன்னதை தவறாக புரிந்திருந்தாலோ அல்லது புண்படுத்தும் வகையில் இருந்தாலோ நான் மனமார்ந்த வர்தத்தை தெரிவித்து கொள்கிறேன்” இவ்வாறு அவர் கூறினார்.