“எனதே இந்த உலகமெல்லாம்...” - தனுஷின் குபேரா பட டீசர் வெளியீடு!
தெலுங்கு திரைப்இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் தனுஷுடன் இணைந்து நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படம் முன்னதாக அக்டோபரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு, அதன் பின்னர் வருகிற ஜூன் 20 ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியானது. இதனிடையே தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா ஆகியோரது ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியானது, இதையடுத்து அண்மையில் ‘போய் வா நண்பா...’ என்ற தலைப்பில் இப்படத்தின் முதல் பாடல் வெளியானது.
இந்த நிலையில் ‘குபேரா’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ‘டிரான்ஸ் அஃப் குபேரா’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த டீசரில், பின்னணியில் ‘ ஒரு பாடல் ஒலிக்க படத்தில் நடித்தில் நடித்துள்ள முக்கியமான கதாபாத்திரங்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.