"நான் மட்டுமே மக்களின் கூட்டணியோடு தேர்தலை சந்திக்கிறேன்" - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உரை !
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் வீரப்பன் சத்திரம் பகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசியவர்,
"உலகெங்கிலும் உரிமை இழந்து அடிமை படுத்தப்பட்ட மக்கள் தங்களின் இனத்தின் பாதுகாப்பு எழுச்சிக்காக விடுதலை பெற்று இருப்பது வரலாறு அதே போல நமது நிலத்தில் உரிமைகளை இழந்தும் உடமைகளை இழந்தும் இறுதியாக உயிரை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம்.
கடந்த 14 ஆண்டுகளாக தாய் நிலத்தில் நாம் அடிமைகள், தாய்மொழியிலே கல்வி கற்றால் வேலை வாய்ப்பு இல்லை, நதிநீர் உரிமை பெற முடியவில்லை, இந்திய பெருங்கடலில் மீன் பிடித்து திரும்ப முடியவில்லை வேளாண்மை செய்ய முடியவில்லை, வேலை செய்ய முடியவில்லை. இதனால் 36 லட்சம் வாக்குகள் பெற்று தமிழகத்தில் மூன்றாவது கட்சியாக அங்கீகாரம் பெற்ற நிற்பது தான் புரட்சி.
மாற்று அரசியலுக்கான போராட்டத்தை முன்னெடுக்கிறோம். ஒவ்வொரின் மனதில் மாற்றம் சிந்தனை வந்து விட்டால் மாற்றம் வந்து விடும். இப்படிப்பட்ட மாற்றம் வருவதற்கு அரிய வாய்ப்பு ஈரோடு கிழக்கு தொகுதி
இடைத்தேர்தல் தந்துள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு பயம் என்பது இல்லை என்பதால், துணிந்து நிற்கிறோம். இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற பழமொழியில் தான் தமிழன் தோற்று போய் விட்டான். ஆங்கிலம் அறிவு இல்லை, ஒரு மொழி வெள்ளை என்பது அழகு இல்லை ஒரு நிறம் தமிழில் எல்லா சாமிகள் கருப்பு தான். முருகன் கருப்பாக தான் இருப்பான், கருப்பாக இருக்கிறேன் மனநோய் தான் எல்லாவற்றுக்கும் காரணம்.
ஒருநாள் வரலாற்றில் வாழ்ந்தவர்களை உரிமையோடு பெருமையோடு நான் திட்டுவது போல நீ என்னை ஒரு நாள் திட்டுவதை கைவிட வேண்டும் என்றால் நாம் தமிழர் கட்சி வாக்கு போடுங்கள். நீங்கள் எனக்கு ஓட்டு போட்டு தான் ஆக வேண்டும், எனக்கு உங்களை விட்டால் வேறு வழியில்லை, அதே போல் எந்த கட்சிக்கு ஓட்டு போட்டாலும் கடைசியில் பிரச்சனை என்றால் என்னிடம் தான் வரவேண்டும். இந்திய துணைக் கண்டத்தில் நான் மட்டுமே பெரிய கூட்டணி மக்களோடு இணைந்து தேர்தலை சந்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.