For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"I am on the way" - வெளியானது #RevolverRita டைட்டில் டீசர்!

07:09 PM Oct 17, 2024 IST | Web Editor
 i am on the way    வெளியானது  revolverrita டைட்டில் டீசர்
Advertisement

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரிவால்வர் ரீடா’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது.

Advertisement

தமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக திரைப்படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷுக்கு மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறான நடிகையர் திலகம் திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. இதேபோல மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்த மாமன்னன் திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று தந்தது.

தொடர்ந்து முதன்மை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்த, ‘ரகு தாத்தா’ திரைப்படம் ஆக. 15-ம் தேதி வெளியானது. இந்தி மொழி திணிப்புக்கு எதிராக இத்திரைப்படத்தில் பல காட்சிகள் இடம்பெற்றன. குறிப்பாக கீர்த்தி சுரேஷின் வசனங்கள் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் கவனத்தை பெற்றது. இத்திரைப்படம் ரசிகர்களிடையே, கவலையான விமர்சனங்களை பெற்றது.

இதைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ், சந்துரு இயக்கியுள்ள ‘ரிவால்வர் ரீடா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கே.எல் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.

இத்திரைப்படத்தில் சுனில், அஜய் கோஷ், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் ரிவால்வர் ரீட்டா திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி கவனம் பெற்றது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளை முன்னிட்டு இத்திரைப்படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Tags :
Advertisement