Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"அமைதியாக இருப்பதால் நான் குற்றவாளி அல்ல" - நிகிதா வெளியிட்ட பரபரப்பு ஆடியோ

அமைதியாகவே இருக்கிறேன் என்பதால் நான் குற்றவாளி இல்லை என அஜித்குமார் வழக்கில் தொடர்புடைய நிகிதா தெரிவித்துள்ளார்.
07:47 PM Jul 04, 2025 IST | Web Editor
அமைதியாகவே இருக்கிறேன் என்பதால் நான் குற்றவாளி இல்லை என அஜித்குமார் வழக்கில் தொடர்புடைய நிகிதா தெரிவித்துள்ளார்.
Advertisement

சிவகங்கையில் நகை மாயமான சம்பவம் தொடர்பாக அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நகை மாயமானதாக புகார் கொடுத்த நிகிதாவின் ஆடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில் நிகிதா கூறியிருப்பதாவது,

Advertisement

"என் கூடவே தான் சக்தீஸ்வரன் என்பவர் இருந்தார். இன்ஸ்பெக்டருக்காக திருப்புவனம் காவல் நிலையத்தில் காத்து கொண்டு இருந்தோம். அன்று இரவு மனு அளித்து விட்டு, வீட்டுக்கு வந்து விட்டோம். மறுநாள் தான் எனக்கு நடந்த சம்பவம் தெரிய வந்தது. அமைதியாகவே இருக்கிறேன் என்பதால் நான் குற்றவாளி இல்லை. கடவுள் சோதனை செய்கிறார் என்று நினைத்து கொள்கிறேன். கல்லூரி திறந்ததில் இருந்து ஒரு நாள் மட்டுமே சென்றேன். அதன்பின் தாயார் உடல்நிலை காரணமாக கல்லூரிக்கு செல்லவில்லை. பூர்விக வீட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக இங்கு உள்ளேன்.

பல துரோகிகளை சந்தித்தது தான் எனது தனிப்பட்ட வாழ்க்கை. தனிப்பட்ட எனது வாழ்க்கை குறித்து தவறாக பேட்டி கொடுக்கிறார்கள். மீடியா நான் எங்கு போனாலும் வீடியோ எடுக்கிறார்கள். எந்த ஒரு உயர் அதிகாரிகயையும் எனக்கு தெரியாது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உயிரிழந்த அஜித்குமாரின் தாயின் உணர்வை மதிப்பு அளித்து மன்னிப்பு கேட்டுள்ளார்.

நானும் அஜித்குமாரின் தாயிடம் பலமுறை மன்னிப்பு கேட்க உள்ளேன். கேமராக்கள் என்னை துரத்திக் கொண்டே வருகிறது. அதனால் என்னால் அஜித்குமாரின் அம்மாவை சந்திக்க முடியவில்லை. எந்த உயிரும் சாக கூடாது என்று நினைக்கிறவள் நான். எறும்பு கூட சாக கூடாது என்று நினைப்பேன்.  கோயில் காவலாளி அஜித் குமார் மரணம் வேதனை அளிக்கிறது.நான் அவ்வளவு பெரிய ஆள் இல்லை. என்னுடைய தந்தை நேர்மையான அதிகாரி.

என் தந்தை வாங்கிய பல மெடல்கள் வீட்டில் உள்ளன. லோன் எடுத்து தான் வீடு கட்டினோம். அரசாங்க அதிகாரிகள் எல்லோருக்கும் தெரியும். எல்லா பிரச்னைகளும் மீடியாவில் வருவதற்கு காரணம் ஆலம்பட்டியைச் சேர்ந்த ஒன்றியச் செயலாளர் சண்முகம்.

அன்னை பாத்திமா கல்லூரியில் பாஜக ஷாவிடம் நெருக்கம் ஆனவர"

இவ்வாறு நிகிதா பேசியுள்ளார்.

Tags :
AjithkumarAjithkumar CaseNikitaPolicesivagangaTN NewsTN Police
Advertisement
Next Article