Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"ஜிஎஸ்டி வரி குறைப்பு என பிரதமர் மோடி அறிவித்திருப்பது மகிழ்ச்சி" - திருமாவளவன் பேட்டி!

எங்களை பொறுத்தவரையில் ஜிஎஸ்டி வரியை முழுமையாக கை விட வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
01:46 PM Aug 15, 2025 IST | Web Editor
எங்களை பொறுத்தவரையில் ஜிஎஸ்டி வரியை முழுமையாக கை விட வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Advertisement

மதுரையில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "வரி குறைப்பு என்ற பிரதமர் அறிவிப்பு மகிழ்ச்சி. பிரதமர் ஒரு ஆர்எஸ்எஸ் பிராடக்ட். அதனால் அவர் அப்படித்தான் பேசுவார். தூய்மை பணியாளர்கள் பிரச்சானையில் தொடக்கத்தில் இருந்தே விசிக குரல் கொடுத்துள்ளது.

Advertisement

தனியார் மயப்படுத்துதலை கைவிட மீண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுக்கிறேன். இதை வைத்து அரசியல் செய்வது அற்பமானது. 11 மண்டலங்களை தனியார்மயப்படுத்தியதே அதிமுக தான். ஜிஎஸ்டி வரி குறைப்பு என பிரதமர் அறிவித்திருப்பது மகிழ்ச்சி. எங்களை பொறுத்தவரையில் ஜிஎஸ்டி வரியை முழுமையாக கை விட வேண்டும்.

தேர்தலுக்காக செய்தாலும் மக்களுக்கு பயன்பெறும் என்றால் அதை வரவேற்கிறேன். சுதந்திர தின விழாவில் ஆர்எஸ்எஸ்ஐ பிரதமர் பாராட்டி பேசியுள்ளது ஏற்புடையதல்ல. மாநில, மத்திய அரசு துறைகளை தனியார் மயமாக்கப்படுவது தனியார் மயம் தீவிரமடைந்து வருகிறது. தனியார் மயமாகும் முயற்சியை கைவிட வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம். தனியார் மயமாக்கும் முயற்சியை அரசு உடனடியாக கை விட வேண்டும் என மீண்டும் ஒரு முறை தமிழக அரசுக்கு வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :
ElectionGSTMaduraimodiPressMeetprime ministerthirumavalavan
Advertisement
Next Article