“மக்களின் சேவகன் நான்...” - தூத்துக்குடியில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
மக்களின் சேவகனாக இருந்து, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.17,300 கோடி மதிப்பில் உள்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். வ.உ.சி. துறைமுக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் சர்பனந்தா சொனோவால், இணையமைச்சர் எல்.முருகன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, இஸ்ரோ தலைவர் சோம்நாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து தமிழில் ‘வணக்கம்’ என கூறி பிரதமர் நரேந்திர மோடி தனது உரையை தொடங்கினார். அவர் பேசியவதாவது :
“தூத்துக்குடியில் தொடங்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு உந்துதலாக அமையும். இந்த திட்டங்கள் அனைத்தும் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும். திட்டங்களின் தொடக்கம் என்பது முன்னேற்றம், வளர்ச்சி, நம்பிக்கைக்கான எடுத்துக்காட்டு.
இதையும் படியுங்கள் : 2047-ல் இந்தியா வல்லரசு நாடாக மாறும்! - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை
ஹைட்ரஜன் மூலம் இயங்கும் நாட்டின் முதல் மக்கள் பயண கப்பல் இன்று துவங்கப்பட்டுள்ளது. இது விரைவில் பயன்பாட்டிற்கு வரும். காசி கங்கை நதியில் இந்த கப்பல் விரைவில் பயணப்படும். வ.உ.சி துறைமுகத்தில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், தூத்துக்குடி தமிழ்நாடு பசுமை ஆற்றல், நீடித்த வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக தமிழ்நாடு முன்னேறிய நிலையில் பயணிக்கும்”
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.