For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மனைவியின் பிறந்தநாளை கொண்டாட வீட்டை அலங்காரம் செய்த கணவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு! திருமணமான 8 மாதத்தில் நடந்த விபரீதம்!

08:55 AM Jun 08, 2024 IST | Web Editor
மனைவியின் பிறந்தநாளை கொண்டாட வீட்டை அலங்காரம் செய்த கணவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு  திருமணமான 8 மாதத்தில் நடந்த விபரீதம்
Advertisement

சென்னை மேற்கு மாம்பலத்தில் மனைவி பிறந்தநாளை கொண்டாட சீரியல் பல்புகளை கட்டியபோது மின்சாரம் தாக்கி கணவர் உயிரிழந்தார்.

Advertisement

சென்னை மேற்கு மாம்பலம், பிருந்தாவன் தெருவைச் சேர்ந்தவர் அகஸ்டின் பால் (29).
இவரது மனைவி கீர்த்தி (25). இவர்களுக்கு எட்டு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில் கீர்த்தியின் 25வது பிறந்தநாள் வந்துள்ளது. இதனை கொண்டாட நேற்று முன்தினம் மாலை வீட்டில் அலங்கார விளக்குகள் அமைக்கும் பணியில் அகஸ்டின் பால் ஈடுபட்டுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அகஸ்டின் மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அகஸ்டின் பால் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த தகவலறிந்த அசோக் நகர் போலீசார் அவரின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமாகி எட்டு மாதங்களே ஆனநிலையில், அகஸ்டின் பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement