For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விவாகரத்து கிடைத்ததை தனக்குத்தானே பாலாபிஷகம் செய்து கொண்டாடிய கணவர்!

மனைவியிடம் இருந்து விவகாரத்து பெற்றதை தனக்குத்தானே பாலாபிஷகம் செய்து ஒருவர் கொண்டாடியுள்ளார்.
05:33 PM Jul 14, 2025 IST | Web Editor
மனைவியிடம் இருந்து விவகாரத்து பெற்றதை தனக்குத்தானே பாலாபிஷகம் செய்து ஒருவர் கொண்டாடியுள்ளார்.
விவாகரத்து கிடைத்ததை தனக்குத்தானே பாலாபிஷகம் செய்து கொண்டாடிய கணவர்
Advertisement

Advertisement

அசாம் மாநிலம் நல்பாரி மாவட்டம் போரோலியபாரா என்ற பகுதியைச் சேர்ந்தவர் மணிக் அலி. இவருக்கு மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவரது மனைவி இரண்டு முறை திருமணத்திற்கு புறம்பான உறவை வைத்துக் கொண்டு, வீட்டில் இருந்து இரண்டு முறை வெளியேறியுள்ளார். ஆனால் தனது குழந்தைக்காக இரண்டு முறை சமரசம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் கணவர்.

இருந்தாலும் இருவருக்கும் இடையே சண்டைகள் ஏற்பட்டுள்ளது. உறுதியற்ற நிலையிலேயே இருவரும் வாழ்ந்து வந்தனர். இதற்கு மேல் இந்த உறவை வலுப்படுத்த முடியாது என சட்டப்பூர்வமாக பிரிவதற்கு முடிவு செய்தனர்.

இதனால் இருவரும் நீதிமன்றத்தில் விவாகரத்திற்கு விண்ணப்பித்தினர்.

இதனை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்னதாக அதிகாரப்பூர்வமாக விவாகரத்து கிடைத்துள்ளது. இன்று முதல் எனக்கு விடுதலை என சந்தோசம் அடைந்துள்ளார்.

மகிழ்ச்சி அடைந்த கையுடன் 40 லிட்டர் பால் வாங்கி, எனக்கு இன்று முதல் எனக்கு விடுதலை எனக் கூறிக்கொண்டே தனக்குத்தானே பாலாபிஷேகம் செய்துள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Tags :
Advertisement