For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"கட்டலின் நோவாக் ராஜிநாமா செய்தது சரியே" - ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன் பேச்சு!

07:12 PM Feb 18, 2024 IST | Web Editor
 கட்டலின் நோவாக் ராஜிநாமா செய்தது சரியே    ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன் பேச்சு
Advertisement

ஹங்கேரி அதிபர் கட்டலின் நோவாக் ராஜிநாமா செய்தது சரியே என்று அந்நாட்டு பிரதமர் விக்டர் ஆர்பன் தெரிவித்துள்ளார்.

Advertisement

ஹங்கேரி அதிபராக கடந்த 2022-ம் ஆண்டு முதல் கட்டலின் நோவாக் பதவி வகித்து வருகிறார். காப்பகத்தில் வசித்த குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நபருக்கு, கட்டலின் நோவாக் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பொது மன்னிப்பு வழங்கினார்.

இது அந்நாட்டு மக்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.  இதனைத் தொடர்ந்து நாட்டு மக்கள் பலரும் அதிபருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கட்டலின் நோவாக் அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.  மேலும், அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதையும் படியுங்கள் : ராம், அபர்ணா, மைதிலி, பியானோ... தமிழ் சினிமாவின் பொக்கிஷம் ‘ஹேராம்’ திரைப்படத்திற்கு 24 வயது!

இதுகுறித்து அவர் நேற்று கூறியதாவது,

"ராஜிநாமா சரியானது. அது எங்களை பலப்படுத்துகிறது. அதிபர் மற்றும் நீதி அமைச்சருக்கு அனைவரின் சார்பாகவும் கனத்த இதயத்துடன் நன்றி கூறுகிறேன். இது ஹங்கேரிக்கு பெரும் இழப்பு. பெரும்பான்மையான ஹங்கேரியர்கள் அவரது பொது மன்னிப்பு முடிவை நிராகரித்தனர். நாட்டில் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
Advertisement