For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Haryana கொள்ளையர்களை சுட்டுப்பிடித்தது எப்படி? - சேலம் சரக DIG உமா விளக்கம்!

04:35 PM Sep 27, 2024 IST | Web Editor
 haryana கொள்ளையர்களை சுட்டுப்பிடித்தது எப்படி    சேலம் சரக dig உமா விளக்கம்
Advertisement

ஹரியானா கொள்ளையர்கள் பிடிபட்டது எப்படி என்பது குறித்து டிஐஜி உமா விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement

நாமக்கல் அருகே இன்று (செப். 27) காலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது கண்டெய்னர் லாரி ஒன்று சோதனையில் நிற்காமல் 4 இரு சக்கர வாகனங்கள், ஒரு காரை இடித்தபடி சென்றது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த குமாரபாளையம் மற்றும் வெப்படி போலீசார் லாரியை விரட்டிச் சென்றனர். சேலம், சன்னியாசிபட்டி அருகே லாரியை மடக்கிப் பிடித்தனர். முதல்கட்ட தகவலில் கண்டெய்னர் லாரியில் கட்டு கட்டாக பணமும், சொகுசு கார் ஒன்றும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, கேரளா மாநிலம் திருசூரில் ஏடிஎம்மில் ரூ.66 லட்சம் கொள்ளையடித்து விட்டு வாகன தணிக்கையில் நிற்காமல் சென்றுள்ளதாக தகவல் வெளியானது. காவல்துறையினர் தொடர்ந்து சென்றதால் கண்டெய்னரில் உள்ளவர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இதில், போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியைச் சுற்றி சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநில பதிவெண் கொண்ட லாரியில் அந்த மாநிலத்தை சேர்ந்த 7 பேர் இருந்ததாக தெரிய வந்துள்ளது. மேலும், கண்டெய்னர் லாரியில் சிக்கியது ஏடிஎம் கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட வெள்ளை நிற ஹோண்டா கிரிட்டாக கார் என்பது தெரிய வந்தது. பிடிபட்டவர்கள் வெல்டிங் மிஷின் மூலம் கொள்ளை அடிக்கும் ஹரியானா மாநில கொள்ளை கும்பல் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஹரியானா கொள்ளையர்கள் பிடிபட்டது எப்படி என்பது குறித்து சேலம் சரக டிஐஜி உமா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது,

“திருச்சூரில் இருந்து வந்த கண்டெய்னர் லாரி ஒன்றில் வந்த 7 நபர்கள், வாகனங்களை இடித்து விட்டு தப்ப முயற்சி செய்தனர். சன்னியாசிப்பட்டியில் போலீசார் லாரியை மடக்கிப் பிடித்தனர். கண்டெய்னர் லாரியை மடக்கிய போது, லாரிக்குள் சத்தம் கேட்டது. திறந்து பார்த்தபோது 2 பேர் தப்பி ஓடினார்கள்.

இருவரையும் துரத்திச் சென்ற போது, ஜூமான் என்பவர் போலீசாரை தாக்க முயன்ற நிலையில், அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. தப்பிச் சென்ற மற்றொருவர் அசார் அலி என்பவரின் காலில் சுட்டுப் பிடித்தோம். கொள்ளையில் ஈடுபட்ட 7 பேரில் 5 பேர் ஹரியானா பல்வால் மாவட்டதைச் சேர்ந்தவர்கள். 2 பேர் வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்”

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement