காங்கிரஸை, திமுகவின் குரல் என்று அண்ணாமலை எப்படி சொல்கிறார்? செல்வபெருந்தகை பேட்டி!
நெல்லையில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, " வாக்கு திருட்டு வாக்கு அதிகாரம் தலைப்பில் நெல்லையில் நாளை 7ம் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில மாநாடு நடைபெறுகிறது. இதில் லட்சகணக்கான மக்கள் இதில் பங்கேற்கிறார்கள். வாக்கை பறித்த பிறகு குடியுரிமையை பறிக்க பாஜக அரசு முயற்சித்து வருகிறது. இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உட்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
திமுக கொண்டு வந்த வரி விதிப்புக்கு எதிராக பேசிய முதல் ஆள் நான் தான், மோட்டார் வாகன வரியை உயர்த்தியதற்கு முதலில் குரல் கொடுத்தது நாங்கள் தான், காங்கிரஸ் கட்சிகாரர்களாக தான் நாங்கள் இருக்கிறோம், திமுகவின் குரல் என்று எப்படி அண்ணாமலை சொல்கிறார்? இதில் என்ன நியாயம்.
இந்தியா கூட்டணியின் பிரம்மிப்பை பார்த்து அண்ணாமலை இது போன்று பேசுகிறார். பாஜக எங்கு இருக்கிறதோ அங்கு சர்வ நாசம் தான் நடக்கும். தமிழகத்தில் அதிமுக 4 அணியாக இருக்க பாஜக தான் காரணம். பாமக பிரிவதற்கு பாஜக தான் காரணம். கிராமம் நோக்கி காங்கிரஸ் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து கிராமத்திலும் காங்கிரஸ் புதுப்பொலிவுடன் இருக்கிறது. யார் ஒன்றாக சேர்ந்தாலும் இந்தியா கூட்டணிக்கு பாதகம் கிடையாது. இந்தியா கூட்டணி வலுமையாக உள்ளது.
அதிமுகவினர் ஒன்றாக இணைந்தால் வேறு ஒருவர்தான் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பார். அவரது வீட்டில் எடப்பாடி பழனிச்சாமி சென்று நிற்கும் நிலை உருவாகும். தமிழகத்தில் இப்போதைய நிலைக்கு மூன்றாவது அணி உருவாவதற்கு வாய்ப்பே கிடையாது என்று தெரிவித்துள்ளார்.