For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சேலம் தொகுதிகளில் தொடர்ந்து அதிமுக வெற்றி பெறுவது எப்படி? - நிர்வாகிகளுக்கு திமுக ஒருங்கிணைப்புக் குழு கேள்வி!!

01:54 PM Jan 27, 2024 IST | Jeni
சேலம் தொகுதிகளில் தொடர்ந்து அதிமுக வெற்றி பெறுவது எப்படி    நிர்வாகிகளுக்கு திமுக ஒருங்கிணைப்புக் குழு கேள்வி
Advertisement

சேலம் நாடாளுமன்ற தொகுதிகளில் தொடர்ந்து அதிமுக வெற்றி பெறுவது எப்படி? என்று அம்மாவட்ட கட்சி நிர்வாகிகளிடம் திமுக ஒருங்கிணைப்புக் குழு கேள்வி எழுப்பியுள்ளது.

Advertisement

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் ஒருங்கிணைப்பு குழு, மாவட்டம் வாரியாக திமுக பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறது. ஜனவரி 24 முதல் பிப்ரவரி 5-ம் தேதி வரை மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டங்களை திமுக நடத்துகிறது.

அந்த வகையில் இன்று சேலம் மற்றும் கோவை மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சேலம் நாடாளுமன்ற தொகுதிகளில் அதிமுக தொடர்ச்சியாக வெற்றி பெறுவது எப்படி? என சேலம் நிர்வாகிகளிடம் திமுக ஒருங்கிணைப்புக் குழு கேள்வி எழுப்பியது. ஒரு சில திமுக நிர்வாகிகள் அதிமுகவினருடன் இணைந்து செயல்படுவதாக தொடர்ச்சியாக புகார்கள் வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஒருங்கிணைப்புக் குழு எச்சரித்துள்ளது.

இதையும் படியுங்கள் : கங்குவா படத்தின் ‘உதிரன்’ லுக் வெளியானது...!

திமுக நிர்வாகிகளுக்கு இடையே இருக்கக்கூடிய போட்டிகளை விட்டுவிட்டு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், 2024 வெற்றி மிகவும் முக்கியம் என்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி வெற்றி பெற்று, ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே, மாநில உரிமைகளை நம்மால் பெற முடியும் என்றும், அதனை கருத்தில் கொண்டு சிறப்பாக செயல்படுங்கள் என்றும், எடப்பாடி தொகுதிக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு ஒருங்கிணைப்புக் குழு அறிவுறுத்தியுள்ளது.

தொடர்ந்து இன்று மாலை நீலகிரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்ட பிரதிநிதிகளுடன் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை நடத்த உள்ளது.

Tags :
Advertisement