For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

'மேடம் வெப்' திரைப்படம் எப்படி இருக்கு?

12:52 PM Feb 19, 2024 IST | Web Editor
 மேடம் வெப்  திரைப்படம் எப்படி இருக்கு
Advertisement

கொலம்பியா பிக்சர்ஸ் மற்றும் மார்வெல் என்டர்டைன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள "மேடம் வெப்" திரைப்படத்தில் டகோடா ஜான்சன்,  சிட்னி ஸ்வீனி,  செலஸ்டி ஓ'கானர்,  இசபெலா மெர்சிட் மற்றும் தஹர் ரஹீம் உட்பட பல நடித்துள்ளனர்.
இந்த படம் தமிழ் உள்பட பல இந்திய மொழிகளிலும் உலகம் முழுவதும் ஆங்கில மொழிகளிலும் வெளியாகி உள்ளது.

Advertisement

விசித்திர சிலந்தியை தேடி,  கர்ப்பிணி ஒருவர் அமேசான் காடுக்கு செல்கிறார்.  நீண்ட தேடுதலுக்கு பின் அந்த சிலந்தியை பிடிக்க,  அவருக்கு காவலராக இருந்த நபரே துப்பாக்கியால் சுட்டு விட்டு சிலந்தியுடன் தப்பிக்கிறார்.  இந்நிலையில் குழந்தையைப் பெற்ற பின் அப்பெண் இறந்து விடுகிறார்.  அந்தப் பிறந்த குழந்தைதான் மேடம் வெப்.மேடம் வெப் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது டகோடா ஜான்சன்.

ஒரு விபத்தில் அவருக்கு எதிர்காலத்தை பார்க்கும் அபூர்வ சக்தி கிடைக்கிறது. இந்நிலையில்,  தனது தாயை கொன்ற அதே நபர் அங்கிருக்கும் மூன்று இளம் பெண்களை சில காரணத்திற்காக கொல்ல முயல்கிறார்.  இதனை தனது சக்தியால் அறிந்து கொண்ட டாகோடா ஜான்சன் எப்படி காப்பாற்றுகிறார் மற்றும் என்ன காரணத்திற்காக வில்லன் தனது தாயையும் இளம்பெண்களையும் கொல்ல முயல்கிறார் என்பதுதான் படத்தின் மீதி கதை.

படம் பற்றிய அலசல்கள்

பொதுவாக சினிமாடிக் யுனிவர்ஸ் படங்களில் அதிகமாக கிராபிக்ஸ் பயன்படுத்திருப்பார்கள்.  ஆனால் இந்த படத்தில் குறைவான கிராபிக்ஸ் தான். இருந்தாலும் படத்திற்கு தேவையான VFX மற்றும் கிராபிக்ஸ் தான்.  டக்கோடா ஜான்சன் ஆக்சன் காட்சிகளில் மிரட்டி உள்ளார்.  சில ஆக்ஷன் காட்சிகள் எதிர்காலத்தையும் கடந்த காலத்தையும் ஒன்று சேருவது போல காட்சிகள் இடம் பெற்றிருக்கும் அது ரசிக்க வைக்கிறது.

நிறைய வளவள காட்சிகள் இடம் பெற்றுள்ளன.  ஆக்சன் காட்சிகள் ரசிக்க வைத்தாலும் குறைவான காட்சிகளே இடம் பெற்றுள்ளது பெரிய ஏமாற்றமாக உள்ளது.  சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் 4-வது ஸ்பைடர் படம் இது.  இதற்கு முன் வெளியான சோனி நிறுவனத்தின் across the ஸ்பைடர் world மிக பெரிய வெற்றி அடைந்த நிலையில்,  இந்த படத்தின் வெற்றியை பொதுமக்கள் எவ்வாறு கொண்டாடுகின்றனர் என்பதை பார்க்கலாம்.

10,20 ஆண்டுகளுக்கு முன் வெளியாக வேண்டிய படம் தற்போது வெளியாகி உள்ளது. ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் இரவு காட்சிகளாகவே இருக்கிறது.  அப்போதான் கிராபிக்ஸ் பற்றி வெளிய தெரியாது என்று எடுத்து இருக்கிறார்கள் போல என்று கூறுகிறார்கள். மாநாடு படத்தை ஆங்கிலத்தில் பார்த்தது போல இருக்கிறது எனவும் கூறுகிறார்கள். ஒரு சிலர் இப்படத்தை கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்து இருக்கிறார்கள் எனவும் எதிர்பார்த்த அளவுக்கு பூர்த்தி செய்யவில்லை எனவும் படம் பார்க்க வந்த ஆடியன்ஸ் கூறுகிறார்கள்.

---சுஷ்மா சுரேஷ்

Tags :
Advertisement