For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வீட்டு மனை ஒதுக்கீடு வழக்கு - அமைச்சர் #IPeriyasamy செப்.30ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!

06:09 PM Sep 13, 2024 IST | Web Editor
வீட்டு மனை ஒதுக்கீடு வழக்கு   அமைச்சர்  iperiyasamy செப் 30ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
Advertisement

வீட்டு மனை ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி செப்.30ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

Advertisement

கடந்த 2008 ஆண்டு ஒய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜாபர்சேட்டின் மனைவி பர்வீன், முன்னாள் முதல்வரின் செயலாளர் ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர் ஆகியோருக்கு சென்னை திருவான்மியூரில் 3457 சதுர அடி மற்றும் 4763 சதுர அடியில் வீட்டுமனைகளை முறைகேடாக ஒதுக்கீடு செய்தாக புகார் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து ஜாபர்சேட்டின் மனைவி பர்வீன், க.முருகையா, கே.ராஜமாணிக்கம், ஆர்.துர்காசங்கர், அப்போதைய வீட்டுவசதி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, டி.உதயகுமார் ஆகிய 7 பேர் மீது கடந்த 2013 ஆண்டு லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்திருந்தது.

இந்த வழக்கில் தற்போதைய அமைச்சர் ஐ.பெரியசாமியை தவிர மற்ற அனைவரின் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டு அவர்கள் அனைவரையும் விடுவித்து உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது.

ஆனால் அமைச்சர் ஐ.பெரியசாமி இவ்வழக்கில் தொடர்ந்து ஆஜராக வில்லை என்பதால் குற்றச்சாட்டுப் பதிவு 9 ஆவது முறையாக தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில் வீட்டு மனை ஒதுக்கீடு வழக்கில் அமைச்சர் குற்றச்சாட்டு பதிவிற்கு அமைச்சர் ஐ.பெரியசாமி செப்டம்பர் 30 தேதி ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எம்.பி, எம்.எல்.ஏ களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Tags :
Advertisement