For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“உச்சநீதிமன்ற மேல்முறையீட்டில் பொன்முடி விடுதலை செய்யப்படுவார் என நம்புகிறோம்!” - என்.ஆர்.இளங்கோ பேட்டி!

03:05 PM Dec 21, 2023 IST | Web Editor
“உச்சநீதிமன்ற மேல்முறையீட்டில் பொன்முடி விடுதலை செய்யப்படுவார் என நம்புகிறோம் ”   என் ஆர் இளங்கோ பேட்டி
Advertisement

30 நாட்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம்... நிச்சயம்
பொன்முடி விடுதலை செய்யப்படுவார் என நம்புகிறோம் என அவரது தரப்பு வழக்கறிஞரும்,  மாநிலங்களவை திமுக உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ கூறியுள்ளார்.

Advertisement

சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

இதனை அடுத்து பொன்முடியின் வழக்கறிஞரும்,  மாநிலங்களவை திமுக உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:

சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சாதாரண சிறை தண்டனையும்,  50 லட்ச ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. இந்த வழக்கில் நாங்கள் உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம். அந்த மேல் முறையிட்டுடில் பொன்முடி நிச்சயம் விடுதலை செய்யப்படுவார் என நம்புகிறோம்.

இந்த வழக்கில் 4 லட்சம் மட்டுமே கணக்கில் வராத பணமாக காட்டப்பட்டது. பொன்முடியின் மனைவி பல நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி வருகின்றார். வருடத்திற்கு 5 கோடி ரூபாய் வரை லாபம் கிடைப்பதாக வருமான வரி தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.  இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடி மிக விரைவில் பொன்முடி விடுதலை செய்யப்படுவார்.  இது முழுக்க முழுக்க சட்டம் சார்ந்த ஒரு பிரச்னை.  இதனை உச்சநீதிமன்றத்திற்கு எடுத்து சொல்வோம்.

30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்து உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்.  திமுக பலமாக இருக்கிறது அதைக் கண்டு பாஜகவினர் பயப்படுகிறார்கள்.  அமைச்சர் பொன்முடி குற்றவாளி என நீதிமன்றம் கூறி இருக்கிறது. ஆனால் மேல்முறையீடு என ஒன்று இருக்கிறது.  2024 இல் பாஜகவினரின் ஊழல் பட்டியல் வெளிவரும்.

இவ்வாறு மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை திமுக உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ தெரிவித்தார்.

Tags :
Advertisement