For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கிறிஸ்துமஸை முன்னிட்டு புனித சிலுவை பெண்கள் கல்லூரியில் குடில்கள் போட்டி!

05:09 PM Dec 22, 2023 IST | Web Editor
கிறிஸ்துமஸை முன்னிட்டு புனித சிலுவை பெண்கள் கல்லூரியில் குடில்கள் போட்டி
Advertisement

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில் புனித சிலுவை பெண்கள் கல்லூரியில் கிறிஸ்துமஸ்  குடில் போட்டிகள் நடைபெற்றது. 

Advertisement

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் 25-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இதனையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கிறிஸ்துமஸ்
குடில் போட்டிகள் மற்றும் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன.  இந்த நிலையில் நாகர்கோவில் புனித சிலுவை பெண்கள் கல்லூரியில் இன்று கிறிஸ்துமஸ் குடில் போட்டி  நடந்தது.

இதையும் படியுங்கள்: திருப்பதியில் பக்தர்கள் திடீர் போராட்டம்!

தொடர்ந்து,  கிறிஸ்து பிறப்பை மையமாக வைத்து இந்த போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.  ஆனால் இந்த முறை வெள்ள பாதிப்பிற்கு காரணமாக அமைந்தவைகள்,  இஸ்ரேல் - ஹமாஸ் போர்,  மது மற்றும் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.

இதனைத் தொடர்ந்து  500-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கள் கைவண்ணத்தில் உருவான கிறிஸ்துமஸ் குடில்களை பார்வையாளர்களுக்கு விளக்கி கூறி,  பார்வையாளர்களை கவர்ந்தனர்.

Tags :
Advertisement