For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஹோலி கொண்டாட்டம் - தேங்காய் எண்ணெய் விற்பனை அமோகம்!

03:42 PM Mar 25, 2024 IST | Web Editor
ஹோலி கொண்டாட்டம்   தேங்காய் எண்ணெய் விற்பனை அமோகம்
Advertisement

ஹோலியை முன்னிட்டு என்றும் இல்லாத அளவுக்கு நேற்று அதிக அளவுக்கு பொருட்கள் பிளிங்கிட்டில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் சிஇஓ அல்பிந்தர் திந்த்சா கூறியுள்ளார்.

Advertisement

தற்போதைய காலகட்டத்தில் மக்கள் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்குவது என்பது மிக அரிதாகி வருகிறது.  ஒரு சிறிய பொருள் வாங்க வேண்டும் என்றாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்கின்றனர்.  ஆர்டர் செய்த சில நிமிடங்ளில் பொருட்கள் வீடுகளுக்கு வந்து விடுகின்றன.

இந்நிலையில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு தேங்காய் எண்ணெய் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக Blinkit நிறுவனத்தின் சிஇஓ அல்பிந்தர் திந்த்சா கூறியுள்ளார்.  வட இந்தியாவில் விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளுள் ஒன்று, ஹோலி.  ஹோலி பண்டிகை என்பது வண்ணங்கள்,  மகிழ்ச்சி மற்றும் அன்பின் பண்டிகையாகும்,  இது இந்தியா முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.  அந்த வகையில் இந்தாண்டும் நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஒரு நிமிடத்திற்கு என்றும் இல்லாத அளவுக்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக பிளிங்கிட் நிறுவனம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து அந்நிறுவனத்தின் சிஇஓ அல்பிந்தர் திந்த்சா தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது;

"பிளிங்கிட்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச OPMஐ (நிமிடத்திற்கான ஆர்டர்கள்) அடைந்துள்ளோம்! எங்களின் அனைத்து நேர சாதனை ஆர்டர்களையும் (இந்த ஆண்டு காதலர் தினம்)முறியடிக்கும் பாதையில் இன்று உள்ளோம்.  ஹாப்பி ஹோலி’

என குறிப்பிட்டுள்ளார்.  மேலும் தேங்காய் எண்ணெய் ஆர்டர் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  சாதாரண ஞாயிற்றுக் கிழமைகளைவிட நேற்று அதிகம் ஆர்டர் செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவுகளுக்கு பலர் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் சில கருத்துகளை இங்கு காண்போம்.

தேங்காய் எண்ணெய்யை வைத்து என்ன செய்யப் போகிறார்கள்.

இது எல்லாவற்றிற்கும் காரணம் ஹோலிதான் என பதிவிட்டுள்ளனர்.

Tags :
Advertisement