For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கடலூர் | மருத்துவமனையில் வெடிகுண்டு இருப்பதாக புரளி - நோயாளிகள் பதற்றம்!

01:41 PM Dec 29, 2024 IST | Web Editor
கடலூர்   மருத்துவமனையில் வெடிகுண்டு இருப்பதாக புரளி   நோயாளிகள் பதற்றம்
Advertisement

கடலூரில் தனியார் மருத்துவமனையில் வெடிகுண்டு இருப்பதாக வந்த அழைப்பையடுத்து அங்கு காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

Advertisement

கடலூர் முதுநகர் அருகே தனியார் பல்நோக்கு மருத்துவமனை அமைந்துள்ளது. அங்கு வெடிகுண்டு இருப்பதாக தொலைப்பேசி அழைப்பு வந்துள்ளது. உடனடியாக திருப்பாதிரிப் புலியூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து சென்ற‌ காவல் துறையினர் அங்கு வெடிகுண்டு அழைப்பு தொடர்பாக விசாரணை நடத்தினர்.

மேலும் மோப்பநாய் லியோ வரவழைக்கப்பட்டது. பின்னர் வெடிகுண்டு சோதனை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, மோப்ப நாய் உதவியுடன் மருத்துவமனை வளாகத்தில்
வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையிட்டனர். இந்நிலையில், மருத்துவமனை வளாகத்தில்
வெடிகுண்டு, வெடிபொருட்கள் ஏதும் இல்லை எனவும், இது வெறும் புரளி என்பதும்
உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து போலீசாரின் விசாரணையில் அது போலி வெடிகுண்டு மிரட்டல் என தெரியவந்துள்ளது. மருத்துவமனைக்கு வெடிகுண்டு வைக்கப்பட்ட புரளியின் காரணமாக நோயாளிகள் பதற்றமடைந்தனர். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

Tags :
Advertisement