HMPV வைரஸ் தொற்று - மீண்டும் #Lockdown ஐ அறிவித்தாரா பிரதமர் மோடி?
This News Fact Checked by ‘India Today’
ஹியூமன் மெட்டாப் நியூமோ வைரஸ் (எச்எம்பிவி) தொற்று தொடர்பாக இந்தியாவில் ஜனவரி 7 ஆம் தேதி வரை எட்டு தொற்றுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த வைரஸ் குறித்து ஊடகங்கள் முதல் சமூக ஊடகங்கள் வரை விவாதம் நடைபெற்று வரும் நிலையில், 2001 ஆம் ஆண்டு முதல் இந்த வைரஸ் இருப்பதாகவும், இது குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் பத்திரிகை தகவல் பணியகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது இந்த நேரத்தில், சில சமூக ஊடக பயனர்கள் மீண்டும் '#லாக்டவுன்' என மீம்ஸைப் பகிர்வதால் மீண்டும் ஊரடங்கு என்கிற வரக்கூடும் என அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவில் "நாட்டில் 21 நாட்களுக்கு இருக்கும். இது மூன்று வாரங்களுக்கு இருக்கும்" என்று பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. வீடியோவில், 'மீண்டும் லாக்டவுன் விதிக்கப்பட உள்ளது ; இந்தியாவில் முதல் HMPV வைரஸ் கண்டறியப்பட்டது, 8 மாத குழந்தைக்கு தொற்று ஏற்பட்டது' மற்றும் 'இது ஜனவரி 15 ஆம் தேதி லாக்டவுன் அமல் என்று எழுதப்பட்டு பகிரப்படுகிறது.
சமூக வலைதளங்களில் வைரலாகும் பதிவில் முக்கிய தேடல் மூலம் தேடுகையில் வைரலான வீடியோ எடுக்கப்பட்ட ஆஜ் தக்கின் வீடியோ அறிக்கையை நாங்கள் கண்டோம். மார்ச் 24, 2020 இன் இந்த அறிக்கையில், வைரல் வீடியோ பகுதியை இரண்டு நிமிடங்கள் 44 வினாடிகளில் பார்க்கலாம். இதில், கொரோனா நோய்த் தொற்றைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் நள்ளிரவு 12 மணி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
முழு ஊரடங்கு குறித்த அறிவிப்பு ஏதேனும் சமீபத்தில் வந்திருந்தால், அது பற்றிய தகவல்கள் அரசாங்க வலைத்தளங்களில் கொடுக்கப்பட்டிருக்கும். எல்லா இடங்களிலும் செய்திகள் வெளியாகியிருக்கும். ஆனால் ஆய்வு செய்ததில் அப்படி எந்த செய்தியும் வரவில்லை. முன்னதாக, ஜனவரி 2023 இல் கூட, Omicron மாறுபாடு XBB.1.5 இன் தொற்றுகள் நாட்டில் அதிகரித்த போது, ஊரடங்கு அறிவிப்பு தொடர்பான பல பழைய வீடியோக்கள் வைரலாகின. அந்த நேரத்திலும் ஆஜ்தக் இது உண்மை அல்ல என தெளிவுபடுத்தியிருந்தது.
முடிவு :
HMPV வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரிப்பதால் மீண்டும் ஊரடங்கு அமல் என பிரதமர் நரேந்திர மோடி பேசும் வீடியோ அடங்கிய பதிவு சமூக ஊடகங்களில் வைரலானது. இந்தியா டுடேவின் ஆய்வில் அது பழைய கோவிட் 19 தொடர்பான ஊரடங்கின்போது பிரதமர் மோடி பேசிய பழைய வீடியோ என்பது கண்டறியப்பட்டுள்ளது.
Note : This story was originally published by ‘India Today’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.