“விராட் கோலியை விட அவரது ரசிகர்கள் மிகப்பெரிய ஜோக்கர்கள்” - பாடகர் ராகுல் வைத்யா!
சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி நடிகை அவ்னீத் கவுர் (ரசிகர்கள் பக்கத்தில்) புகைப்படத்திற்கு லைக் செய்ததாக சர்ச்சை எழுந்தது. இதற்கு விளக்கமளித்த விராட் கோலி, “எனது சமூக வலைதளப் பக்கத்தில் கிளியர் சர்ச் ஃபீட் செய்யும்போது அல்காரிதத்தின் தவறுதலால் விருப்பக் குறியிட்டதாகக் காட்டியிருக்கும். இதற்கு வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. தேவையில்லாத ஊகங்களை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். புரிதலுக்கு நன்றி” என விளக்கமளித்திருந்தார்.
இதனிடையே இந்த நிகழ்வின்போது ஹிந்தி பாடகர் ராகுல் வைத்யா (37) தனது இன்ஸ்டா பக்கத்தில், “பெண்களே உங்களது படங்களுக்கு நான் லைக் செய்வதில்லை. அல்காரிதம் செய்திருக்கலாம்” எனக் கிண்டலாக பதிவிட்டிருந்தார். இதுதொடர்பாக பேசிய அவர், இந்தப் பதிவினால் விராட் கோலி தன்னை இன்ஸ்டாவில் பிளாக் செய்ததாகவும், அதுவும் இன்ஸ்டாகிராமின் அல்காரிதம் தவறினால் ஏற்பட்டிருக்கலாம் என சமீபத்தில் கூறியிருந்தார்.
இதனால் விராட் கோலி ரசிகர்கள் ராகுல் வைத்யாவை விமர்சனம் செய்யத் தொடங்கினர். அவர் குறித்தும், அவரது குடும்பத்தினர் இன்ஸ்டா கமெண்டுகளில் அவதூறாக கருத்துகளை பதிவிட்டு வந்துள்ளனர். இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக தனது இன்ஸ்டா ஸ்டோரியில், “விராட் கோலியின் ரசிகர்கள் அவரை விட மிகப்பெரிய ஜோக்கர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், என்னைக் குறித்து அவதூறு பேசுங்கள் அதை பொருத்துக் கொள்ளலாம். ஆனால்,எனது மனைவி, சகோதரிகள் குறித்து பேசுவது ஏற்கத்தக்கதல்ல.
எனது குடும்பத்தினரைக் குறித்து பேசுவதற்கு தனிப்பட்ட நபர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. அதனால்தான் சொல்கிறேன் விராட் கோலி ரசிகர்கள் கோமாளிகள்!” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது பேசுபொருளாகியுள்ளது.