For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்களை கனகசபை மீது அனுமதிக்காத தீட்சிதர்கள் மீது இந்து சமய அறநிலையத்துறை புகார்!

09:26 PM Dec 25, 2023 IST | Web Editor
சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்களை கனகசபை மீது அனுமதிக்காத தீட்சிதர்கள் மீது இந்து சமய அறநிலையத்துறை புகார்
Advertisement

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்களை கனகசபை மேடை மீது அனுமதிக்காத தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி இந்து சமய அறநிலையத்துறையின் செயல் அலுவலர் சரண்யா புகார் அளித்துள்ளார்.

Advertisement

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்று வருகிறது. நாளை
தேரோட்டமும், நாளை மறுநாள் ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெற உள்ளது. இந்நிலையில், இன்று பக்தர்கள் கனகசபை மேடை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுத்துப்பட்டுள்ளது. அனுமதி மறுத்தது மட்டுமல்லாது, கனகசபை மீது ஏறும்
படிக்கட்டின் கதவையும் கோயிலின் உட்புறமாக தாழிட்டுள்ளனர். இதனால், பக்தர்கள்
ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இந்நிலையில், சில பக்தர்கள் கோயிலில்
கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதற்காக தீட்சிதர்களிடம் கேட்டுள்ளனர்.

ஆனால், தீட்சிதர்கள் அதற்கும் அனுமதிதர மறுத்துள்ளனர். இதுகுறித்து, பக்தர்கள் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அதன்படி, தில்லைக்காளி
கோயில் செயல் அலுவலர் சரண்யா இதுகுறித்து தீட்சிதர்களிடம் கேட்டுள்ளார். அப்பொழுதும்  தீட்சிதர்கள் அனுமதிக்க மறுத்துள்ளனர். இந்நிலையில், தில்லைக்காளி கோயில் செயல் அலுவலர் சரண்யா இந்த நிகழ்வு குறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்கள் கனகசபை மேடை மீது ஏறி சாமி தரிசனம்
செய்ய கேட்டபோது தீட்சிதர்கள் அனுமதிக்க மறுத்துள்ளனர். இதுகுறித்து, நான் அங்கிருந்த
தீட்சிதர்களிடம் அரசாணைப்படி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்குமாறு
கேட்டபோது இன்று முதல் 28ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு கனகசபை மேடையில்
யாருக்கும் அனுமதி கிடையாது என தெரிவித்தனர். மேலும் கனகசபை மேடை கதவை
திறக்கவும் முடியாது. பக்தர்களை அனுமதிக்கவும் முடியாது என கூறி அரசு ஊழியரான என்னை பணி செய்ய விடாமலும் தடுத்துள்ளனர்.

இதுகுறித்து கோயில் செயலாளரிடம் விளக்கம் கேட்டபோது, சென்னை உயர்நீதிமன்றம்
உத்தரவு பிறப்பித்திருக்கிறது என்று தெரிவித்தார். நான் உயர் நீதிமன்ற உத்தரவை காண்பிக்குமாறு கேட்டபோது அதுகுறித்து அவர்கள் எந்த தகவலையும் தராமல்
அலட்சியமாக பதில் கூறினர். அரசு அலுவலராகிய எங்களை பணி செய்ய விடாமல் தடுத்து
5க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் மிரட்டும் தோரணையில் நடந்து கொண்டனர். எனவே,
அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சரண்யா புகாரில்
தெரிவித்துள்ளார்.

இதுபோன்று, கடந்த ஆனி மாதம் நடைபெற்ற திருமஞ்சன திருவிழாவின் போதும் கோயிலில் பக்த்தர்கள் கனகசபை மீது ஏற தீட்சிதர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் பல்வேறு சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட்டு, இந்து சமய அறநிலையத்துறையினர் அதிரடியாக பதாகைகளை அகற்றியதும் குறிப்பிடதக்கது.

Tags :
Advertisement