For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

குடியாத்தம் அருகே 50 ஆண்டுகளாக மின்சாரம், சாலை இல்லாமல் அல்லல்படும் மலை கிராம மக்கள்!

01:13 PM Jan 04, 2024 IST | Web Editor
குடியாத்தம் அருகே 50 ஆண்டுகளாக மின்சாரம்  சாலை இல்லாமல் அல்லல்படும் மலை கிராம மக்கள்
Advertisement

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தத்தை அடுத்த மலை கிராமத்தில் 50 ஆண்டுகளாக  மின்சாரம் மற்றும் சாலை வசதி இல்லாததால், 10 ஆண்டுகளாக  மலை கிராம விவசாயிகள் போராடி வருகின்றனர்.

Advertisement

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் அடுத்த வீரிசெட்ட பள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட மலைப்பகுதியில் எள் கொள்ளை என்ற மலை கிராமம் உள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக பல குடும்பங்கள் அங்கு வசித்து வந்த நிலையில், சாலை வசதி இல்லாததாலும் மின்சார வசதி இல்லாததாலும் பல குடும்பங்கள்  கிராமத்திலிருந்து வெளியேறி உள்ளனர். இந்நிலையில் தற்போது பத்துக்கும் அதிகமான குடும்பங்கள் மட்டுமே அங்கு வசித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : மியான்மரில் 9,000-க்கும் மேற்பட்ட கைதிகள் விடுதலை!

இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது; 

"மலை கிராமத்திற்கு சாலை மற்றும் மின்சார வசதி இல்லாமல் இருக்கும் நிலையில் தங்கள் பிள்ளைகள் மற்றும் பேரன் பேத்திகளின் படிப்பை கருத்தில் கொண்டு அவர்களுக்கு நகரத்தில் வீடு வாடகைக்கு எடுத்து அவர்களை படிக்க வைத்து வருகிறோம். மேலும், உடனடியாக சாலை மற்றும் மின்சார வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

இதுவரையில் டிவி பார்த்ததில்லை....எங்கள் மலை கிராமத்தில் செல்போன் கிடையாது ...நாட்டில் நடக்கும் எந்த ஒரு நல்லது கெட்டது எதுவும் எங்களுக்கு தெரிவதில்லை.... இரவு நேரங்களில் மண்ணெண்ணெய் விளக்கு அல்லது டார்ச் லைட் உதவிய உடனே வாழ்ந்து வருவதாகவும் இரவு நேரங்களில் அதிக அளவில் பாம்புகள் அச்சுறுத்தல் இருகிறது.

கிணற்றில் தண்ணீர் இருந்தும் மின்சாரம் இல்லாததால் விவசாயம் செய்ய முடியாமல், ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் கிடைப்பதில்லை, மேலும் நகரில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் இருந்து டீசல் வாங்கி மலை கிராமம் தூக்கி கொண்டு வருவது மிகவும் சிரமமாக உள்ளதாலும், விவசாயம் செய்ய முடியா நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் மின்சார வசதி வேண்டி கடந்த 10 ஆண்டுகளாக போராடி வருவதாகவும், வனத்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் உதவி செய்தால் மட்டுமே எங்கள் எள்ளுகொல்லை மலை கிராமத்திற்க்கு சாலை மற்றும் மின்சார வசதி கிடைக்கும்" இவ்வாறு வேதனையுடன்  மலைக்கிராம மக்கள் கூறியுள்ளனர்.

Tags :
Advertisement