For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“அதிக வாக்குப்பதிவு மக்களின் தெளிவான முடிவை காட்டுகிறது” - பாக். பிரதமர் அன்வாருல் ஹக் கக்கார்...

10:12 AM Feb 09, 2024 IST | Web Editor
“அதிக வாக்குப்பதிவு மக்களின் தெளிவான முடிவை காட்டுகிறது”   பாக்  பிரதமர் அன்வாருல் ஹக் கக்கார்
Advertisement

பாகிஸ்தானில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு அந்நாட்டின் இடைக்கால பிரதமர் அன்வாருல் ஹக் கக்கார் அந்நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்தியாவின் அண்டைநாடான பாகிஸ்தானில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.  பாகிஸ்தானில் மொத்தம் 12 கோடியே 85 லட்சத்து 85 ஆயிரத்து 760 பேர் வாக்களிக்க தகுதியுடைவர்கள் என அந்நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் 9 லட்சத்து 7 ஆயிரத்து 675 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.  மொத்தம் 265 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.  ஒரு தொகுதியில் வேட்பாளரின் மரணம் காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.  இந்த தேர்தல் குறித்து அந்நாட்டின் இடைக்கால பிரதமர் அன்வாருல் ஹக் கக்கார்  தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளரார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

பொதுத்தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்த தேசத்திறக்கு என் நன்றியையும், வாழ்த்தையும் தெரிவித்து கொள்கிறேன்.  பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்,  ஆயுதப்படை, ஊடகங்கள் என அனைவரின் பங்களிப்பையும்,  முயற்சியையும் பாராட்டுகிறேன். இந்த தேர்தல் நமது ஜனநாயக செயல்முறைகளின் பின்னடைவு மற்றும் வலிமைக்கு மட்டுமல்லாமல், பாகிஸ்தான் மக்களின் அசைக்க முடியாத மனப்பான்மைக்கும் ஒரு எடுத்துகாட்டாக உள்ளது. அதிக வாக்குப்பதிவு என்பது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பொதுமக்களின் தெளிவான முடிவாகும்.

இது, தங்களது ஜனநாயக உரிமையை நிலைநாட்டுவதில் பாகிஸ்தான் மக்கள் காட்டும் உற்சாகத்தையும், உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்துகிறது. நமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இது முக்கியப் பங்கு வகிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement