பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் கடத்தி வரப்பட்ட 12 கிலோ ஹெராயின்!
ஆளில்லா விமானம் மூலம் பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 12 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து ராஜஸ்தானின் அனுப்கர்க்கு ஆளில்லா விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 12 கிலோ ஹெராயின் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ. 60 கோடி இருக்கும் என தெரியவந்துள்ளது.
அனுப்கர் மற்றும் சமேஜா கோதி காவல் நிலையப் பகுதிகளில் இருந்து பாகிஸ்தானில் இருந்து ஆளில்லா விமானங்கள் மூலம் கடத்தப்பட்டபோது, எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் காவல்துறையினரால் தலா 6 கிலோ எடையுள்ள இரண்டு ஹெராயின் பாக்கெட்டுகள் மீட்கப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், அனுப்கர் காவல் நிலையப் பகுதியில், இன்று காலை கைலாஷ் போஸ்ட் அருகே ஒரு கிராமத்தில் ஆளில்லா விமானத்தின் சத்தம் கேட்டு எல்லைப் பாதுகாப்புப் படை ஜவான்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவித்தனர். எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து நடத்திய சோதனையில், தலா 6 கிலோ எடையுள்ள இரண்டு ஹெராயின் பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதையும் படியுங்கள் : திடீரென பரவிய வதந்தியால் கீழே குதித்த பயணிகள் – சரக்கு ரயில் மோதி 3 பயணிகள் உயிரிழப்பு!
அதன் மதிப்பு ரூ.30 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. சமேஜா கோத்தி காவல் நிலையப் பகுதியில் நடந்த இரண்டாவது சம்பவத்தில், ஆளில்லா விமானத்தின் சத்தம் கேட்ட உள்ளூர்வாசிகள், காவல்துறைக்கு தகவல் கொடுத்தன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கிராம மக்கள் மற்றும் காவல் துறையினர் சேர்ந்து கடத்தல் காரர்களை பிடிக்க முயன்ற போது அவர்கள் தீயை காட்டி தப்பிக்க முயன்றுள்ளனர்.
இதையடுத்து, ஆளில்லா விமானங்கள் மூலம் பாகிஸ்தானில் இருந்து போதைப் பொருள்கள் அடிக்கடி கடத்தப்படுவதாகவும், விரைவில் ட்ரோன்களைக் கண்காணித்து செயலிழக்கச் செய்ய எல்லைப் பகுதியில் ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு நிறுவப்படும் என்று அனுப்கர் காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் மோரியா தெரிவித்தார்.