’மெண்டல் மனதில்’ படத்தின் அப்டேட் இதோ..!
நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் குமார் தற்போது செல்வராகவன் இயக்கும் ’மெண்டல் மனதில்’ படத்தில் நடிக்கின்றார். இது கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான ’நானே வருவேன்’ படத்திற்கு பின் செல்வராகவன் இயக்கும் படமாகும்.
இந்த படத்தை பாரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள ஜி.வி பிரகாஷ் அவரே இசையும் அமைத்துள்ளார். முன்னதாக செல்வராகவன், ஜி.வி பிரகாஷ் காம்போவில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் மற்றும் மயக்கம்என்ன படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் ஜி.வி பிரகாஷ் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் ,”செல்வராகவன் சார் இயக்கத்தில், மெண்டல் மனதில் படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இப்படத்தின் ஆல்பத்துக்காக காத்திருங்கள்.
ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன படங்களுக்குப் பிறகு எனக்குப் பிடித்த ஆல்பங்களில் ஒன்றாக இது இருக்கும்" என்று பதிவிட்டிருக்கிறார்.