நாளை வெளியாகிறது ’டீசல்’ படத்தின் டிரெய்லர்..!
தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் முக்கிய நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். இவர் நடிப்பில் வெளியான ‘பார்க்கிங்’, ‘லப்பர் பந்து’ ஆகிய படங்கள் அடுத்தடுத்த வெற்றியடைந்துள்ளன.
இதனை தொடர்ந்து இயக்குநர் சண்முகம் முத்துச்சாமி இயக்கியுள்ள ‘டீசல்’ படத்தில் நடித்துள்ளார். ஹரிஷ் கல்யாண் கரியரில் அதிக பட்ஜெட்டில் உருவான படம் இது. இதனால் ‘டீசல்’ படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, வினய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், விவேக் பிரசன்னா, சச்சின் கேதேகர், ஜாகீர் உசேன், தங்கதுரை, கேபிஒய் தீனா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படம் வரும் தீபாளியை முன்னிட்டு வெளியாகிறது. இந்த நிலையில் டீசல் படத்தின் டிரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
#Diesel trailer from tomorrow 5pm.
Waiting & excited ☺️#DieselDiwali ❤️🙏🧨 pic.twitter.com/vp29s3bdn3
— Harish Kalyan (@iamharishkalyan) October 9, 2025