For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#TNPSC குரூப் 2 தேர்வு எழுத போறீங்களா? வழிகாட்டு நெறிமுறைகள் இதோ...

11:00 AM Sep 05, 2024 IST | Web Editor
 tnpsc குரூப் 2 தேர்வு எழுத போறீங்களா  வழிகாட்டு நெறிமுறைகள் இதோ
Advertisement

TNPSC குரூப் 2 தேர்வறையில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன

Advertisement

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் குரூப்-2 நிலையில் காலியாக உள்ள 2,327 பணியிடங்களுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது. பட்டப்படிப்பு கல்வித்தகுதி கொண்ட இப்பணியிடங்களுக்கு 7 லட்சத்து 93 ஆயிரத்து 962 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில், செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெற உள்ள முதல்நிலைத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதனை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்:

தேர்வறையில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் விவரம் பின்வருமாறு:-

செப்டம்பர் 14ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தேர்வு தொடங்கும் நிலையில், காலை 9 மணிக்குள் தேர்வறைக்குள் இருக்க வேண்டும்.

சலுகை நேரத்திற்கு பிறகு எந்த ஒரு தேர்வரும் தேர்வு அறைக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்.

தேர்வு நேரம் முடியும் வரை தேர்வர் யாரும் தேர்வு அறையைவிட்டு வெளியறே அனுமதிக்கப்படமாட்டார்கள்.

தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட ஹால் டிக்கெட்டுடன் தேர்வர்கள் தேர்வு நடைபெறும் இடத்திற்கு வர வேண்டும்.

ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், நிரந்தர கணக்கு எண் அட்டை(Pan Card) , வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் ஒளி நகலை தேர்வர்கள் கொண்டு வர வேண்டும்.

ஹால் டிக்கெட்டில் தேர்வரின் புகைப்படம் அச்சிடப்படவில்லை அல்லது தெளிவாக இல்லை என்றால் கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம் ஒன்றை வெள்ளை காகிதத்தில் ஒட்டி, அதில் தனது பெயர் முகவரி, பதிவு எண்ணை குறிப்பிட்டு, கையொப்பமிட்டு, ஹால் டிக்கெட்டின் ஒளி நகல் உள்ளிட்ட ஏதோனும் ஒரு அடையாள அட்டையின் ஒளிநகலை இணைத்து, தலைமைக் கண்காணிப்பாளரிடம் சரிபார்க்கப்பட்டு மேலொப்பமிடும் பொருட்டு சமர்ப்பிக்க வேண்டும்.

ஹால் டிக்கெட்டில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், உடனடியாக தேர்வாணையத்திற்கு மின்னஞ்சல் (grievance.tnpsc@tn.gov.in) மூலம் தெரிவிக்கலாம்.

தேர்வர்கள் கருமைநிற மை கொண்ட பந்துமுனைப் பேனாவை (Black ink Ball Point Pen) மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

அலைபேசி, புத்தகங்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை தேர்வர்கள் கொண்டு வர வேண்டாம். மீறினால் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம் அல்லது வேறு ஏதேனும் அபராதத்திற்கு உள்ளாக நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement