Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#HemaCommitteeReport | “5 ஆண்டுகளாக அரசு குற்றவாளிகளை பாதுகாத்துள்ளது” - கேரள காங்கிரஸ் குற்றச்சாட்டு!

08:15 PM Aug 26, 2024 IST | Web Editor
Advertisement

கேரள அரசு கடந்த 5 ஆண்டுகளாக ஹேமா கமிட்டி அறிக்கையை வெளியிடாமல் மறைத்து, இதன்மூலம் குற்றவாளிகளை பாதுகாத்துள்ளதாகவும் கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீஷன் தெரிவித்துள்ளார்.

Advertisement

மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகள் குறித்த நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கை மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. நடிகை ரேவதி சம்பத் என்பவர் நடிகர்கள் சித்திக் மற்றும் ரியாஸ் கான் இருவரும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டினார். தொடர்ந்து பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா மலையாள இயக்குநர் ரஞ்சித், சினிமா விவாதத்திற்காகத் தன்னை வீட்டிற்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்தார் என கூறியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் கேரளத்தில் அதிர்வைக் கிளப்ப, நடிகர் சித்திக் மலையாள நடிகர்கள் சங்கத்தின் (அம்மா) பொதுச்செயலாளர் பதவியையும், இயக்குநர் ரஞ்சித் கலாச்சித்ரா அகாதெமியின் தலைவர் பொறுப்பிலிருந்தும் ராஜிநாமா செய்தனர். தொடர்ந்து மேலும் பல நடிகைகள் தங்களுக்கு நிகழ்ந்த பாதிப்புகளைக் குறித்து பேச முன்வந்தால் பல நடிகர்கள் சிக்குவார்கள் என்றே தெரிகிறது. மலையாள நடிகர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் மோகன்லாலுக்கு சித்திக்கின் பாலியல் தொல்லைகள் குறித்து தெரியாமல் இருக்குமா? என பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதனிடையே, கேரள அரசு கடந்த 5 ஆண்டுகளாக ஹேமா கமிட்டி அறிக்கையை வெளியிடாமல் மறைத்து வைத்திருந்ததாகவும், இதன்மூலம் குற்றவாளிகளை பாதுகாத்து வந்திருப்பதாகவும் கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீஷன் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையும், அதனுடன் சேர்த்து ஆதாரங்களை உள்ளடக்கிய பென்டிரைவ் ஒன்றும் அரசிடம் 5 ஆண்டுகளாக வெளியிடப்படாமல் இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய புலனாய்வுக் குழு அமைத்து கேரள அரசு விசாரணையை முடுக்கிவிடக் கோரியுள்ளார். கேரள அரசு தற்போது ஒரு விசாரணைக் குழு அமைத்துள்ளதாகவும், ஆனால் இதுகுறித்த செய்திக் குறிப்பில் ஹேமா கமிட்டி என்ற பெயர் குறிப்பிடாதது ஏமாற்றம் அளிப்பதாகவும், இவ்விவகாரத்தில் முழு விசாரணை நடத்த வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையில் பல நபர்களின் பெயர்களை மறைத்து அதன்பின் வெளியிட அரசு முயற்சித்து வருவதாக் வி.டி.சதீஷன் குற்றம் சாட்டியுள்ளார்.

Tags :
CongressHema Committee ReportJustice Hema Committee reportMalayalam film industryNews7Tamilnews7TamilUpdatesSexual assaultSexual harassmentVD Satheesan
Advertisement
Next Article