For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாராளமாக உதவுங்கள் - வீடியோ வெளியிட்டு நடிகை நிகிலா விமல் வேண்டுகோள்!

07:40 PM Aug 04, 2024 IST | Web Editor
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாராளமாக உதவுங்கள்   வீடியோ வெளியிட்டு நடிகை நிகிலா விமல் வேண்டுகோள்
Advertisement

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் வகையில் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தாராளமாக வழங்க வேண்டும் என பிரபல மலையாள நடிகையான நிகிலா விமல் வீடியோ வெளியிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த 29-ம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவால் சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை போன்ற கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த பகுதிகளில் இருந்த வீடுகளும் மண்ணால் மூடப்பட்டன. 400 குடும்பங்கள் இந்த நிலச்சரிவில் சிக்கினர். சுமார் 1000த்திற்கும் அதிமானோர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்காக தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், விமானப் படையினர் உள்ளிட்டோர் தொடர்ந்து 6வது நாளாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ராணுவக் குழுக்கள் 500க்கும் மேற்பட்ட வீரர்களுடன், நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட தேயிலைத் தோட்டங்கள் மற்றும் கிராமங்களுக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.

மலையுச்சியில் குகைகளில் சிக்கிக் கொண்ட பழங்குடி மக்களை கேரளா மாநில வனத்துறை மிகவும் சிரமப்பட்டு மீட்டனர். 4பழங்குடி குழந்தைகள் உட்பட 6பழங்குடியினரை கையிறுகள் மூலம் மலையேற்றத்தில் ஈடுபட்டு மீட்டனர். குழந்தைகளை தங்களது உடல்களில் கட்டிக் கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வந்தனர். இந்த சம்பவம் பலரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 376பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் வகையில் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தாராளமாக வழங்க வேண்டும் என பிரபல மலையாள நடிகையான நிகிலா விமல் வீடியோ வெளியிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார். நிலச்சரிவு ஏற்ப்பட்ட அடுத்த நாளே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரோடு இணைந்து நிகிலா விமல் நிவாரணப் பணிகளை செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement