கோவில்பட்டியில் கடும் பனிப்பொழிவு - வாகன ஓட்டிகள் அவதி !
கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் தொடர் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயழ்பு வாழ்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் கோவில்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால் மக்களை குளிர் வதைக்கிறது.
இதனால் அதிகாலை வேளைக்கு செல்லும் கிராம மக்கள் மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடும் பனிப்பொழிவு நிலவுவதால் எதிரிலும், அருகிலும் வரும் வாகனங்களை பார்க்க முடியாத சூழல் உண்டாகியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டு செல்கின்றனர். மற்ற வாகனங்களை பார்க்க முடியாததால் விபத்து ஏற்படுவதற்கான அச்சமும் எழுந்துள்ளது.
இதே போல் மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் கடும் பனிப்பொழிவால் வாகன
ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டப்படி செல்கின்றனர். மேலும் தென் மாவட்டங்கள் வழியாக இயக்கக்கூடிய ரயில்கள் அனைத்தும் பனிப்பொழிவால் சிறிது காலதாமதமாக இயக்கப்பட்டு வருகின்றது.