For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Gujarat மழை வெள்ளத்தில் சிக்கிய சொகுசு பேருந்து - 50க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கித் தவிப்பு!

07:22 AM Sep 27, 2024 IST | Web Editor
 gujarat மழை வெள்ளத்தில் சிக்கிய  சொகுசு பேருந்து   50க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கித் தவிப்பு
Advertisement

குஜராத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சொகுசு பேருந்து சிக்கி தமிழ்நாட்டை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Advertisement

குஜராத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பாப்நகர் மாவட்டத்தில் உள்ள ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் ஓடுகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த 50-திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு பஸ், கோலியாக் கிராமத்தில் உள்ள தரைபாலத்தை கடக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக தரைப்பாலத்தின் வெள்ளத்தில் சிக்கியது.

அந்த பேருந்தில் தூத்துக்குடி, மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்து சென்ற 50-திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கடந்த 30 மணி நேரத்திற்கும் மேல் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இது குறித்து உடனடியாக பேரிடர் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாப்நகர் பேரிடர் மீட்பு படையினர் தரைப்பாலத்தின் வெள்ளத்தில் சிக்கிய சொகுசு பஸ்சில் இருந்து தமிழ்நாடு பக்தர்களை டிரக் மூலமாக மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள் : நிதி ஒதுக்கீடு கோரிக்கை - இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமச்சர் #MKStalin

தமிழ்நாடு பக்தர்கள் கோலியாக் கிராமத்தில் அருகில் உள்ள நிஷ்கலங்க் மகாதேவ் கோயிலுக்கு சென்று விட்டு பாவ்நகரை நோக்கி திரும்பும்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பாவ்நகர் பேரிடர் மேலாண்மைப் பிரிவு துணை மாமலதார் சதீஷ் ஜம்புச்சா தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு காவல்துறை மூத்த அதிகாரிகள் விரைந்து மீட்கும் பணியை பார்வையிட்டனர்.

Tags :
Advertisement