வெள்ளத்தில் மிதக்கும் துபாய்...ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்தது...
ஐக்கிய அரபு எமிரேட்சில் நேற்று கொட்டித் தீர்த்த கனமழையால் பல சாலைகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வெள்ளப் பெருக்கு காரணமாக துபாயின் பெரும்பாலான சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சராசரியாக, துபாய் நகரத்தில் ஒரு ஆண்டில் 88.9 மிமீ மழை பதிவாகும். மேலும் அந்நாட்டின் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. எதிர்பாராத இந்த கனமழை காரணமாக, பரபரப்பான நகரத்தை ஸ்தம்பிக்க வைத்தது மட்டுமல்லாமல், இப்பகுதியில் தீவிர வானிலை நிகழ்வுகளில் காலநிலை மாற்றத்தின் அதிகரித்துவரும் வெளிப்படையான தாக்கம் பற்றிய கவலையையும் எழுப்பியது.
கனமழை காரணமாக, சர்வதேச பயணிகளுக்கான உலகின் பரபரப்பான விமான மையமான துபாய் சர்வதேச விமான நிலையம், பல விமானங்களைத் திருப்பிவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 25 நிமிடங்களுக்குப் பிறகு படிப்படியாக மாலையில் புறப்படும் விமானங்களின் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்ட போதிலும் பல விமானங்கள் தாமதமாக புறப்பட்டதுடன், சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
Everything in Dubai is always extra extra . The speed of the wind that accompanied the flood is unprecedented in so many ways
———————-
Chito / Falomo / Khaid/Aisha /Taraba / Ugandans pic.twitter.com/QadxLNk6aW— Emuoborsan (@GracedUp1) April 17, 2024
துபாய் வெள்ளம் தொடர்பான பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. துபாய் மட்டுமின்றி ஒட்டுமொத்த ஐக்கிய அரபு நாடுகளிலும் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. அண்டை நாடான பஹ்ரைன் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் ஐக்கிய அரசு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. இன்று அங்கு ஆலங்கட்டி மழை உட்பட கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
இதே போல் ஓமன் நாட்டிலும் கனமழை காரணமாக கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் வெள்ளத்தில் குழந்தைகள் உட்பட 18 பேர் இறந்தனர். இந்த கனமழையால் பஹ்ரைனும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.