For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

டெல்லியில் கனமழை - இதுவரை 11 பேர் உயிரிழப்பு!

07:31 AM Jun 30, 2024 IST | Web Editor
டெல்லியில் கனமழை   இதுவரை 11 பேர் உயிரிழப்பு
Advertisement

டெல்லியில் பெய்துவரும் கனமழை காரணமாக இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement

டெல்லியில் 88 ஆண்டுகளுக்குப் பிறகு கனமழை பெய்து வருகிறது. கடந்த 1936-ம் ஆண்டில் 234 மில்லிமீட்டர் மழை பெய்தது. அதற்குப் பிறகு தற்போது ஜூன் மாதத்தில் 228 மில்லிமீட்டர் மழை டெல்லியில் பதிவாகியுள்ளது. 88 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் கனமழை பெய்துள்ளதால் டெல்லியின் முக்கிய பகுதிகள், சந்திப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், தெற்கு டெல்லியின் வசந்த் விஹார் பகுதியில் புதிதாக கட்டப்படும் கட்டிட சுவர் இடிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்கள் சந்தோஷ் குமார்யாதவ் (19), சந்தோஷ் (38) எனத்தெரியவந்துள்ளது. மற்றொருவர் யார் என்ற விவரம் தெரியவில்லை.

அதேபோல், வடமேற்கு டெல்லியின் பட்லி பகுதியில் இரண்டு சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கிய சுரங்கப்பாதையில் மூழ்கி இறந்தனர். தொடர்ந்து, ஜெய்த்பூர் பகுதியை சேர்ந்த திக்விஜய் குமார் சவுத்ரி என்ற 60 வயது முதியவர் ஓக்லா பகுதியில் தண்ணீர் தேங்கிய பாதாளப் பாதையில் வாகனத்துடன் சிக்கி உயிரிழந்தார். இதையடுத்து டெல்லியில் கனமழைக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

மீட்புப் பணிதொடர்ந்து நடைபெற்று வருகிறது. மழையின் காரணமாக நேற்று முன்தினம் (ஜூன் 28) 5 பேர் உயிரிழந்தனர். நேற்று 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மழையின் பாதிப்பு இன்னும் தொடர்கிறது.

Tags :
Advertisement