அர்ஜென்டினாவில் கனமழை, வெள்ளம் - உயிரிழப்பு எண்ணிக்கை 16 ஆக உயர்வு !
அர்ஜென்டினாவில் கனமழையின் காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.
08:49 AM Mar 10, 2025 IST | Web Editor
Advertisement
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள அர்ஜென்டினா நாட்டில் பியூனோஸ் அயர்ஸ் மாகாணம் பாஹியா பிளான்கா நகரில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது.
Advertisement
இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதனிடையே, கனமழை, வெள்ளத்தால் ஏற்கனவே 10 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி, அர்ஜென்டினாவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர். அதேவேளை, வெள்ளத்தில் சிக்கி பலர் மாயமாகியுள்ளனர்.