Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தொடரும் கனமழை - சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. இன்றைய தேர்வுகள் ஒத்திவைப்பு!

10:07 AM Jan 08, 2024 IST | Web Editor
Advertisement

தொடர் கனமழை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தின் இன்றைய தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் அறிவித்துள்ளார்.

Advertisement

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு  கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே, கனமழை காரணமாக செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : பில்கீஸ் பானு வழக்கில் 11குற்றவாளிகளை குஜராத் அரசு விடுத்த விவகாரம் – உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு.!

அதனைத் தொடர்ந்து, தொடர் கனமழை காரணமாக கடலூர் மாவட்ட நிர்வாக உத்தரவின்படி இன்று அண்ணாமலை பல்கலைகழகம் விடுமுறை அளித்துள்ளது. அதனால், அண்ணாமலை பல்கலைகழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளுக்கு இன்று (ஜன.08)  நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு வைக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் தெரிவித்துள்ளார். மேலும், தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Annamalai universityChidambaramExamsheavy rainspostponementTNRainstoday
Advertisement
Next Article