#AndhraPradesh -ல் கனமழை எதிரொலி : 2 விரைவு ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு!
ஆந்திராவில் பெய்து வரும் கனமழையால் 2 விரைவு ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திராவில் பலத்த மழை பெய்தது. இதனால் ஆறு, குளங்கள், ஏரிகள் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. சுமார் 62,000 எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, வாழை, தக்காளி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. விஜயவாடா, மொகல்ராஜபுரம், சுண்ணாம்பு மலையில் இடைவிடாமல் பெய்த பலத்த மழையின் காரணமாக மலையில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் அங்கிருந்த வீடுகளின் மீது விழுந்ததில் வீடுகள் தரைமட்டமாகியது.
இதையும் படியுங்கள் : ஆன்லைனில் ஆர்டர் செய்த Pressure Cooker 2ஆண்டுகளுக்கு பிறகு Delivery ! – Marsல் இருந்து வந்திருக்குமோ என இணையவாசிகள் கிண்டல்!
இந்நிலையில், 2 விரைவு ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. விஜயவாடா - காசியாபாத் இடையே செல்லும் ரயிலானது அதன் வழித்தடமான ராயனபடு ரயில் நிலையத்தில் மழை நீர் தேங்கியுள்ளது. வண்டி எண் 12687 மதுரையில் இரவு 11.35 மணிக்கு புறப்படும் மதுரை - சண்டிகர் விரைவு ரயில் ரேணிகுண்டா, செக்கந்திராபாத், காஜிபேட் வழியாக மாற்று பாதையில் இயக்கப்படும். இந்த ரயில் அரக்கோணம், பெரம்பலூர், விஜயவாடா, வாரங்கல் செல்லாது.
வண்டி எண் 22613 மண்டபத்தில் இருந்து அதிகாலை 12.30 மணிக்கு புறப்படும் அயோத்தியா விரைவு ரயில் ரேணிகுண்டா, காச்சிகுடா, காஜிபேட் வழியாக இயக்கப்படும். இந்த ரயில் சென்னை எழும்பூர், குண்டூர், விஜயவாடா, வாரங்கல் செல்லாது என அறிவித்துள்ளனர்.