கனமழை - 6 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை...
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் அதை ஒட்டி உள்ள கேரளப் பகுதிகளில் வளிமண்டல கீழெடுக்க சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்து மூன்று தினங்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழையை பொருத்தவரை அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, தேனி,
திண்டுக்கல், ஆகிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கன மழையும், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வும் மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி பல மாவட்டங்களில் நேற்று இரவு விடியவிடிய மழை பெய்த காரணத்தினாலும், தொடர்ந்து மழை எச்சரிக்கை இருக்கும் காரணத்தினாலும் பள்ளி, கல்லுரிவுகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தொடர் மழை காரணமாக நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நீலகிரிஆகிய 6 மாவட்டங்களில் இன்று (23-11-2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.