For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

09:56 AM Nov 18, 2023 IST | Web Editor
தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
Advertisement

தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

நேற்று முன் தினம் (16-11-2023) மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து நேற்று (17-11-2023) காலை 05.30 மணி அளவில் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 'மிதிலி' புயலாக வலுப்பெற்றது.  பின்னர் காலை 08.30 மணி அளவில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் பாரதீப்பிலிருந்து (ஒடிசா) சுமார் 2 கிலோ மீட்டர் கிழக்கு-வடகிழக்கே,  டிகாவிலிருந்து (மேற்கு வங்கம்) சுமார் 180 கிலோ மீட்டர் கிழக்கு-தென்கிழக்கே, கேப்புபாராவிலிருந்து (வங்கதேசம்) சுமார் 180 கிலோ மீட்டர் தென்மேற்கே நிலை கொண்டு பின்னர் நேற்று பிற்பகல் கரையை கடந்தது.

இதையும் படியுங்கள்: 1000 திரையரங்குகளில் “ஆளவந்தான்” – டிச. 8-ம் தேதி மறுவெளியீடு!

இந்த நிலையில், தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,  செங்கல்பட்டு,  காஞ்சிபுரம்,  திருவள்ளூர்,  அரியலூர்,  தஞ்சாவூர், புதுக்கோட்டை,  சிவகங்கை,  திருவாரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும்,  கடலூர்,  மயிலாடுதுறை,  நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement