கனமழை; 500 ஏக்கர் சின்ன வெங்காயம் பாதிப்பு - இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை!
விருதுநகரில் தொடர்மழை காரணமாக திருகல், அழுகல் நோயினால் 500 ஏக்கரில் பயிரிடப்பட்ட சின்ன வெங்காயம் பாதிக்கப்பட்டது. மேலும், உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், M.ரெட்டியபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான மறவர்
பெருங்குடி, M.மீனாட்சிபுரம் கல்லுப்பட்டி, சலுக்குவார்பட்டி, உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 500 ஏக்கருக்கும் மேல் விவசாயிகள் சின்ன வெங்காயம் பயிர் செய்துள்ளனர்.
சின்ன வெங்காயத்தை 70 நாட்கள் முதல் 110 நாட்களில் விவசாயம் செய்து அறுவடை செய்யலாம். எனவே, இப்பகுதியில் உள்ள விவசாயிகள் ஏராளமானோர் சின்ன வெங்காயத்தை பயிர் செய்தனர்.
இதையும் படியுங்கள்:“திரைநாயகி திரிஷாவே.. என்னை மன்னித்துவிடு” – நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை!
அதனை தொடர்ந்து, ஒரு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை செலவு செய்துள்ள நிலையில்,
தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக அதிகளவு நீர் தேங்கி வெங்காய
பயிர்கள் முழுவதும் திருகல் மற்றும் அழுகல் நோயால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், சின்ன வெங்காயத்திற்கு எதிர்பார்த்த விலையும் கிடைக்காததால்
விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். அதனை தொடர்ந்து, ஏராளமான விவசாயிகள் விதைக்காக சேமித்து வைத்த வெங்காயம் முழுவதும் மழையால் அழுகியும், முளைத்தும் வீணாகி உள்ளது.
இதேபோல் கடந்த ஆண்டும் மழையால் வெங்காய விவசாயம் பாதிக்கப்பட்டதாகவும், அதன் பின்பு கோடை காலத்தில் பயிரிடப்பட்டு வெங்காயத்திற்கு உரிய விலை கிடைக்காத காரணத்தால் விவசாயம் பாதித்தது.
தற்போது மீண்டும் தொடர் மழை காரணமாக அழுகல் மற்றும் திருகல் நோயால் வெங்காயப் பயிர்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் மிகுந்த வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இதனைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள்
மூலம் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாய பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.