மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கவில்லை! - தஞ்சையில் டிடிவி தினகரன் பேட்டி!
நாடாளுமன்ற தேர்தலில் நிற்பது குறித்து தான் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்றத்தில் புகைக் குப்பி வீசப்பட்டது போன்ற ஊடுருவல்களை தடுப்பது மத்திய அரசின் கடமை என்று தெரிவித்தார்.
எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது சரியான நடைமுறை இல்லை என்று தெரிவித்த அவர், அதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் சரியான நிலைப்பாடாக இருக்கும் என்று கூறினார்.
தேர்தல் கூட்டணி குறித்து இந்த மாத இறுதிக்குள் அல்லது அடுத்த மாதத்தில் நல்ல முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும், தான் தேர்தலில் நிற்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : டாப் 50 ஆசிய பிரபலங்களின் பட்டியல் - ஷாருக்கான் முதலிடம்... 8வது இடத்தில் விஜய்..!
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று எப்போதும் தான் கூறியது இல்லை என்று தெரிவித்த அவர், தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என கூறியுள்ளதாகவும், கடைசி வரை அமமுகவில் தான் இருப்பேன் என்றும் செய்தியாளர்களிடம் கூறினார்.