For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

”மகளை பறிகொடுத்ததால் இந்த பிறந்தநாளை கொண்டாடவில்லை" - இளையராஜா பேட்டி!

03:08 PM Jun 02, 2024 IST | Web Editor
”மகளை பறிகொடுத்ததால் இந்த பிறந்தநாளை கொண்டாடவில்லை    இளையராஜா பேட்டி
Advertisement

தனது மகளை பறிகொடுத்ததால் இந்த பிறந்தநாளை கொண்டாடவில்லை என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

Advertisement

இசையமைப்பாளர் இளையராஜா தனது 81-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக 100-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது ஸ்டுடியோ முன்பு கூடியிருந்தனர். அவர்களை சந்தித்த இளையராஜா, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.அதன்பின், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது : “நீங்கள் தான் எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்கிறீர்கள். என் மகளை பறிகொடுத்த காரணத்தினால் நான் இந்த பிறந்தநாளை கொண்டாடவில்லை. உங்களுக்காக தான் இந்த கொண்டாட்டம் எல்லாம்” என கூறினார்.

தொடர்ந்து இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்து நடிகர் ராமராஜன், பின்னணி பாடகி ஸ்வேதா மோகன் மற்றும் இயக்குநர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த பேசிய நடிகர் ராமராஜன்,  “அண்ணன் பல்லாண்டு வாழ வேண்டும்.  அண்ணனை நேரில் சந்தித்து வாழ்த்தியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இசையமைப்பாளராக இருந்து அனைத்து சூழ்நிலைகளுக்கு ஏற்ப பாடல்களுக்கு இசையமைக்க இளையராஜாவை போல் வேறு யாரும் இல்லை” என்று தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவின் கீழ் திருநங்கைகளுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு ரத்து!

பின்னணி பாடகி ஸ்வேதா மோகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஜூன் 2ம் தேதி பல நூற்றாண்டுகள் கொண்டாடப்படக்கூடிய நாள் ராஜா சார் பிறந்தநாள். சென்னையில் இருந்து கொண்டு ராஜா சாரை பார்க்காமல் இருக்க முடியாது. அவரை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது உடல் ஆரோக்கியத்திற்காக அனைவரும்
பிரார்த்திக்க வேண்டும்” என்று கூறினார்.

Tags :
Advertisement