டெல்லி தேர்தல் முடிவுக்கு பிறகு அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நிலை மோசமடைந்ததா? - வைரல் கூற்றின் பின்னணி என்ன?
This News Fact Checked by ‘The Quint’
சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்தது. இந்த நிலையில் தேர்தல் தோல்வியால் டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் கோமா நிலைக்குச் செல்லக்கூடும் என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் சஞ்சய் சிங் சமீபத்தில் கூறியதாகக் கூறும் ஒரு கிராஃபிக் கார்டு இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது .
உண்மை சரிபார்ப்பு :
வைரல் கிராஃபிக் கார்டு தொடர்பாக உண்மை சரிபார்ப்புக்கு உட்படுத்தியபோது அது தவறான சூழலில் பகிரப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட பிறகு கெஜ்ரிவாலின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக சிங் பேசிய பழைய வைரல் கார்டு தற்போது தவறான கூற்றுடன் பகிரப்படுகிறது. அசல் புகைப்படம் ஜூலை 2024 இல் பகிரப்பட்டது.
இதனை எப்படி கண்டுபிடித்தோம்?: வைரலான கூற்றுக்குப் பின்னால் உள்ள உண்மையைக் கண்டறிய, நியூஸ்24 இன் அதிகாரப்பூர்வ X கணக்கை வெப்கூஃப் குழு ஆய்வு செய்தது
"कोमा में जा सकते हैं सीएम केजरीवाल"
◆ आप सांसद संजय सिंह ने कहा @AamAadmiParty @AAPDelhi #ArvindKejriwal pic.twitter.com/WRzdTY29rR
— News24 (@news24tvchannel) July 15, 2024
இதன் முடிவில் ஜூலை 15, 2024 அன்று வெளியிடப்பட்ட அதே கிராஃபிக்கைப் பார்த்தோம் . 'முதல்வர் கெஜ்ரிவால் கோமா நிலைக்குச் செல்லக்கூடும்' என்று வாசகம் எழுதப்பட்டுள்ளது. இவ்வாறு ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கார்டில் இடம்பெற்ற வாசகத்தை வைத்து முக்கிய வார்த்தைகளை பயன்படுத்தி தேடியதில் கெஜ்ரிவால் பற்றிய திகார் சிறை நிர்வாகத்தின் கூற்றுகளை சிங் விமர்சித்ததாகக் கூறும் இந்தியா டுடே வெளியிட்ட செய்தி அறிக்கை கிடைத்தது.
அந்த அறிக்கையில் கெஜ்ரிவாலின் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், அவரது உடல்நிலை சாதாரணமாக இருப்பதாகவும் அதிகாரிகள் கூறியிருந்தனர். இது தொடர்பாக பேசிய சஞ்சய் சிங் , கைது செய்யப்பட்ட பிறகு முதலமைச்சர் எட்டரை கிலோ எடையைக் குறைந்துள்ளதாகவும், அவரது இரத்த சர்க்கரை அளவு குறைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்ததால் கெஜ்ரிவால் கோமாவில் நிலைக்கு செல்லக்கூடும் என்றும் சஞ்சய் சிங் கூறியிருந்தார்.
முடிவு:
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்ததால் கெஜ்ரிவாலின் உடல்நிலை மோசமானது என சமூக வலைதளங்களில் கிராஃபிக் கார்டு வைரலானது. இதுகுறித்து நடத்தப்பட்ட உண்மை சரிப்பார்ப்பில் வைரலாகும் படம் பழையது என்பதும், அது தவறான குறிப்புகளுடன் பகிரப்படுவதும் தெளிவாகியுள்ளது.
Note : This story was originally published by ‘The Quint’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.