Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#HaryanaElection | ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்!

07:00 AM Oct 05, 2024 IST | Web Editor
Advertisement

ஹரியானாவில் உள்ள 90  சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.

Advertisement

ஹரியானா சட்டசபைக்கு இன்று (அக். 5) ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இதில் வாக்களிக்க இரண்டு கோடி பேர் தகுதி பெற்றுள்ளனர். பதிவாகும் வாக்குகள் வரும் அக்டோபர் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்ப்ட உள்ளன. 90 சட்டசபை தொகுதிகளில் ஹரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பூபிந்தர் சிங் மற்றும் 101 பெண்கள் உட்பட 1,031 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதில் 464 பேர் சுயேச்சைகளாக போட்டியிடுகின்றனர். 100 வயதை கடந்த 8,821 பேர் உட்பட 2,03,54,350 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மொத்த வாக்காளர்களில் 1,07,75,957 ஆண்கள், 95,77,926 பெண்கள், 467 திருநங்கைகள். 5,24,514 வாக்காளர்கள் 18 முதல் 19 வயதுடையவர்களும் அடங்குவர். 115 வாக்குச்சாவடிகள் முழுக்க முழுக்க பெண் ஊழியர்களாலும், 87 மாற்றுத்திறனாளி பணியாளர்களாலும், 114 வாக்குச்சாவடிகள் இளைஞர்களாலும் நிர்வகிக்கப்படுகின்றன.

மாநிலத்தில் பாதுகாப்பு மற்றும் அமைதியை உறுதி செய்வதற்காக 30,000 காவல்துறையினரும், 225 துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மொத்தம் 20,632 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 3,460 வாக்குச் சாவடிகள் முக்கியமானவை எனவும், 138 வாக்குச் சாவடிகள் ஆபத்து நிறைந்தவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அங்கு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், 507 பறக்கும் படைகள், 464 நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 32 விரைவு பதில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 1,156 ரோந்துக் குழுவினர் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றுமா? அல்லது காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Tags :
assembly electionBJPCongressECIElectionELECTION COMMISSION OF INDIAharyanaHaryana ElelctionNews7TamilPoll Day
Advertisement
Next Article