For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Haryana | கமிஷனர் அலுவலகத்தில் பஜனை பாடல்... இணையத்தில் கடும் எதிர்ப்பு!

10:01 PM Oct 29, 2024 IST | Web Editor
 haryana   கமிஷனர் அலுவலகத்தில் பஜனை பாடல்    இணையத்தில் கடும் எதிர்ப்பு
Advertisement

ஹரியானாவின், குருகிராம் கமிஷனர் அலுவலகத்தில் காவல்துறையினரின் மன அழுத்தத்தை குறைக்கும் விதமான பஜனை பாடல் பாடப்பட்ட சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Advertisement

ஹரியானா மாநிலம், குருகிராம் மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற தேசிய காவலர் தினத்தில் காவலர்கள் கலந்து கொண்டனர். பின்னர் காவல்துறையினரின் மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக குருகிராம் கமிஷனர் அலுவலகத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது துறவிகள் சிலர் பஜனை பாடல்களை பாடினர். இந்நிகழ்ச்சியின்போது காவல்துறை அதிகாரிகள் சிலர் துறவிகளின் பஜனையை கைத்தட்டி ரசித்து பார்த்தனர்.

https://twitter.com/AG_knocks/status/1850434876111245792

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியானது. இந்த காணொலி வைரலானதை அடுத்து இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஹரியானாவில் தற்போது பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு 3-ஆவது முறையாக ஆட்சியை பிடித்த பாஜக அனைத்து துறைகளையும் காவிமயமாக்கி வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்த ஒருவர், "அவசர தேவைக்கு நாங்கள் 100க்கு அழைத்தால் போலீசார் பஜனை பாடலில் பிஸியாக இருப்பார்கள். இப்படி போலீசாருக்கு நிகழ்ச்சி நடத்துவது அறிவியலுக்கு எதிரானது. மூட நம்பிக்கையை அதிகரிக்கும் செயல்" என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ நாடு முழுவதும் பேசுபொருளாகி உள்ளது.

Tags :
Advertisement