Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Haryana- ல் ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்! வெளியானது சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்...

07:36 PM Oct 05, 2024 IST | Web Editor
Advertisement

ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என அம்மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

Advertisement

ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கும் இன்று (05.10.2024) காலை 7 மணிக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.

காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைவரும், ஹரியானாவின் தற்போதைய முதல்வருமான நயாப் சிங் சைனி, ஹரியானா முன்னாள் முதலைமைச்சர் பூபிந்தர் சிங் ஹூடா, பாஜக முன்னாள் தலைவர் சாவித்ரி ஜிண்டால் என முக்கிய அரசியல் புள்ளிகள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினார்கள்.

அவர்களைத் தொடர்ந்து, மல்யுத்த வீராங்கனையும் தற்போதைய காங்கிரஸ் வேட்பாளருமான வினேஷ் போகத், மல்யுத்த வீரரும் பாஜக தலைவருமான யோகேஷ்வர் தத் மல்யுத்த வீரரும் காங்கிரஸ் தலைவருமான பஜ்ரங் புனியா அவரது மனைவி சங்கீத போகத் என மக்களால் கவனிக்கபடும் புள்ளிகளும் அவர்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.

கடந்த 2 தேர்தல்களிலும், அதாவது கடந்த 10 ஆண்டுகள் பாஜக தொடர்ந்து ஆட்சியை கைபற்றியுள்ளது. 2 முறையும் எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் இந்த முறை ஆட்சியை கைப்பற்றுமா என எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், இந்த ஹரியானா சட்டசபை தேர்தல் முடிவுகள் வரும் அக்டோபர் 8 ம்-தேதி வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டசபை தேர்தல்களின் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதன்படி,

Peoples Pulse கருத்துக்கணிப்புகள்:

காங்கிரஸ் கட்சி 55 இடங்களையும், பாஜக 26 இடங்களையும், ஜேஜேபி 0-1 இடங்களையும், ஐஎன்எல்டி 2 முதல் 3 இடங்களையும் பெறலாம் என பீப்பிள்ஸ் பல்ஸ் கருத்துக் கணிப்பையும் வெளியிட்டுள்ளது.

Republic Metrize கருத்துக்கணிப்புகள்:

ஆம் ஆத்மி கட்சிக்கு பூஜ்ஜிய இடங்களும், பாஜகவுக்கு 18-24 இடங்களும், காங்கிரசுக்கு 55-62 இடங்களும், ஐஎன்எல்டி 3 முதல் 6 இடங்களும், பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணிக்கு 3 முதல் 6 இடங்களும் கிடைக்கலாம் என Republic Metrize கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

Dhruv Research கருத்துக்கணிப்புகள்:

துருவ் கருத்துக்கணிப்புகள் படி, காங்கிரஸ் முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். அதே நேரத்தில் பாஜக 27 இடங்களைப் பெறும் என்று தெரிகிறது. மற்றவர்களுக்கு 6 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Dainik Bhaskar கருத்துக்கணிப்புகள்:

இந்த கருத்துக்கணிப்பு 10 ஆண்டுகளுக்கு பிறகு ஹரியானாவில் காங்கிரஸ் மீண்டும் வருவதை காட்டுகிறது. மாநிலத்தில் பாஜக 15-29 இடங்களையும், காங்கிரசுக்கு 44-54 இடங்களும் கிடைக்கும். ஜேஜேபி கூட்டணிக்கு 1 இடமும், ஐஎன்எல்டி கூட்டணிக்கு 1-5 இடங்களும் மற்றவர்களுக்கு 4-9 இடங்களும் கிடைக்கும் என Dainik Bhaskar கருத்துக்கணிப்புகள் மூலம் தெரிகிறது. 

இப்படி ஹரியானாவை பொறுத்தவரை அனைத்து கருத்து கணிப்புகளுமே அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியை பிடிக்கும் என கூறுகின்றன. இது காங்கிரஸ் கட்சியினரை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags :
assembly electionBJP’CongressElectionharyanaHaryana ElelctionlectionCommissionofIndia
Advertisement
Next Article